பக்கம்:தமிழர் மதம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கதை தமிழர் மதம் உலகியம் ஒன்று மட்டும் உலகம் முழுமைக்கும் தொன்று தொட்டுப் பொதுவாகும். மதங்க ளெல்லாம், தேவியம் (Theiam) அல்லது உள்ளியம் (ஆஸ்திகம்), தேவிலியம் (Atheism) அல்லது இல்லியம் (நாஸ் திகம்) என இரு வகைப்பட் டிருப்பதால், மதவியல் வாயிலாக மக்களை ஒன்று படுத்தல் இயலாது. அதனாலேயே, இந்திய ஒன் றியமும் (Indian Union) மதவியலைத் தழுவாது உலகியலையே (Secularism) தழுவி யுள்ள து. ஆகவே, தாய்மொழி யொன்றே ஓரினப் பல மதத்தாரையும் ஒன்றா யிணைக்க வல்ல தாம். ஆதலால், தமிழர் எம் மதத்தா ராயினும் தமிழைத் தாய்போற் பேணிக் காத்தல் வேண்டும். தமிழ் என்பது தனித் தமிழே. அயல் தாட்டு மதம் என்னுங் கரணியத்தால், அயன் மொழிச் சொற்களை ஆளுதல் கூடாது. தமிழ்மொழி பற்றியே தமிழர் என்னும் இனம் அமைந்திருப்ப தால், தமிழ்ச் சொல்லை வழங்காதார் தமிழராகார். அயல் நாட்டு மதம் பற்றிய அயன் மொழிச் சொற்களை யெல்லாம் தமிழில் மொழி பெயர்த் தாள வேண்டும். நேர்த் தென் சொல் ஏற்கெனவே யில்லா விடின், புதுச்சொல் புனைந்து கொள்ள வேண்டும். மதம் என்பது, காணப் படாத மறுமை நோக்கிய தாதலால், எல்லா மதங்களையும் சமமாக நோக்கு தல் வேண்டும். ஒவ் வொரு மதத்தார்க்கும் தம் மதத்தைப் பிறர்க் கெடுத் துரைக்க வுரிமை யிருப்பினும், அது பற்றிப் பிற மதத்தாரை வெறுப்பதும் பகைப்பதும், மத நோக்கத்திற்கும் மாந்தன் தன்மைக்கும் முற்றும் மாறான தாகும். கடவு ளிருப்பது உண்மையாயின், அவரை நம்புவாரையும் நம்பாதாரையும் அவரே மறுமையிற் கவனித்துக் கொள்வார். இம்மையைப் பொறுத்த மட்டில், எல்லாரும் உடன் பிறப்பாக ஒன்றி வாழல் வேண்டும். அதுவே உயர்திணை பென்னும் மக்கட் டன்மை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/212&oldid=1429371" இலிருந்து மீள்விக்கப்பட்டது