பக்கம்:தமிழர் மதம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எல்லா மக்களும் , வெவ்வேறு தொழிலும் வினையுஞ் செய்து உடன் பிறப்புப் போற் கூடி வாழ்தற்கே, அவர் உடல் உளம் மதி முதலியன வெவ் வேறு திறம்பட இறைவனும் படைக்கப் பட்டுள்ளன. - இனி, உணவு, தட்ப வெப்ப நிலை, பழக்க வழக்கம், பயிற்சி முதலியவற்றாலும், தொடர் மரபினாலும் (heredity), இருவகைக் கரண வலியும் மேன் மேலும் வளர்க்கப் படுவனவாயு முள்ளன. மாந்தனுக்குப் பகுத்தறிவும் தன் விருப்பச் செயலுரிமையும் அளிக்கப் பட்டிருப்பதால், அவன் தன் வலிமையை வளர்ப்பதும் தளர்ப்பதும் அவனையே பொறுத்துள்ளன. தீய அல்லது தகாத வாழ்க்கையால் ஒருவன் தன் வலிமையைக் கெடுத்துக் கொள் ளின் , தன் வழியினர் வலிமையையுங் கெடுத்தவ னாகின்றான். "சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனுங் குறளும் ஊமூஞ் செவிடும் - மாவும் மருளும் (புறநா.அ) ஆகிய எண்வகை எச்சப் பிறவியும், குறு வாழ்வும், கொடு நோயும், தீய மனமும், முன்னோர் தவற்றாலும் நேரலாம். அத் தகைத் தொல்வரவுப் பேறு எத்தனத் தலைமுறை தாண்டியும் தேர்தல் கூடும். இனி, செல்வமும் வறுமையும் போன்றே, மனத் தூய்மை யும் மனத் தீமையும், இயற்கைச் சேதமுங் கொள்ளை நோயும், அரசியல் தவற்றாலும் தேரும். ஆதலால், பிறவியிலமையும் தீய நிலைமைகட்கும் இயற்கை யில் நேரும் துன்ப நேர்ச்சிகட்கும், இறைவனே கரணிய மாகான் என்பதை அறிதல் வேண்டும்.

  • இருவே றுலகத் தியற்கை திருவேறு தென்னிய ராதலும் வேறு.

(குறள். . எச) ஆதலால், தெள்ளிய அறிஞர் செல்வராவதில்லை. அதற்கு ஆசை யின்மையும் பண்புடைமையுமே கரணியம். சோம்பேறிகள் முயற்சி யின்மையால் வறுமையடைகின் றனர். அதனால், அவர் மக்கள் வறியராய்ப் பிறக்கின்றனர். முயற்சி யுடையார் வறியரா தற்கு அரசியல் தவறே கரணியம் தனிப்பட்டவர் நோயுறுவதற்குத் தன் தவசே, முன்னோர் தவறோ, தெய்வத் தண்டனையோ, கரணியமா யிருக்கலாம். நல்லார் நோயுறு தற்கு இறைவன் தடுத்தாட் கொள்ளலும் கரணியமாகும். இயற்கைச் சேதத்தால் ஓர் ஊரார் அல்லது நாட்டார் அழிவது பெரும்பாலும் தெய்வத் தண்டனே யே. உலகம் முழுவதும் அழிவது இறைவன் அழிப்புத் தொழில். அது மக்கள் மிகையால் அல்லது இருக்கத்தால் நேர்வது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/214&oldid=1429373" இலிருந்து மீள்விக்கப்பட்டது