பக்கம்:தமிழர் மதம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை வியல் ஓர் ஊரில் தலைவியா யிருந்த வேலி என்பவள், 'ஓர் இடிந்த மண்சுவரைக் கட்டுவிக்கப் பலமுறை முயன்றாள். அதிலிருந்த ஒரு பிராமணப் பேய், கட்டி முடித்த ஒவ்வொரு முறையும், கட்டி னவனுக்குக் கூலி கொடுக்கு முன்,அதை இடிந்து விழச் செய்தது. கடைசியிற் கம்பர் வந்து கட்டி முடித்துக் கூலி வாங்கிய பின், அது விழவிருக்குங் குறிப்பை யறிந்து, ககூ "மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன் சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே. என்ற பாட்டைப் பாடவும், அது விழாது நின்று கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரூரில், ஒரு நெடுஞ்சாலை யைச் சற்று மறித்துக் கொண்டிருந்த ஒரு நூறாட்டை வேப்ப மரத்தை, வெட்டி விடும்படி உத்தர வாயிற்று. அதிற் பேயிருக் கின்ற தென்று ஒருவரும் வெட்ட முன் வரவில்லை. கூலி அதிக மாகத் தருவதாகச் சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தியதன்மேல், துணிந்து வந்த இரண்டொருவரும், கோடரியால் ஒருவெட்டு வெட்டினவுடன் பின் வாங்கிக் காய்ச்சல் கண்டு, வீட்டிற் படுத் துக் கொண்டனர். அதன்பின் அச்சம் அதிகரித்தது. கூலியை எத்துணை உயர்த்தினும் வெட்ட ஒருவரும் இசைய வில்லை. அதன் பின், திருச்சித் தண்டலாளரான ஆங்கிலத்துரை, ஓர்உசமணி நேர வெளியேற்றக் கட்டளைச் சீட்டில் தாம் கையெழுத்திட்டு, அம்மரத்தில் ஒட்டச் சொல்லிவிட்டு, மறுநாள் தாமே சில வேலைக் காரரைக் கொண்டு வந்து வெட்டச் சொன்னார். மரம் விரைந்து வெட்டப்பட்டது. ஒருவருக்கும் ஒன்றும் நேரவில்லை. பேய்களையும் பூதங்களையும், கல்லிலும் சுதையிலும் சிறிதும் பெரிதுமாக அஞ்சத்தக்க முகத்துடன் மாந்தனைப் போன்ற படி வஞ் சமைத்தும், கற்றூணில் உருவஞ் செதுக்கியும், சுவரில் ஓவி யம் வரைந்தும், உடம்பு வடிவின்றி மண்ணிலும் சுதையிலும் பட்டைக் கூம்பாக அமைத்தும், உருவ வணக்கஞ் செய்து வந் தனர், பண்டையர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/35&oldid=1428888" இலிருந்து மீள்விக்கப்பட்டது