2.0 தமிழர் மதம் (உ) கடிமரம் கடிமரம் என்பது, ஒவ்வொரு குறுநில மன்னனும் பெருநில வேந்தனும், கொடியும் முத்திரையும் போலத் தன் ஆள்குடிச் சின்னமாகக் கொண்டு, பகைவர் வெட் டாதவாறும் அவர் யானையை அதிற் கட்டாதவாறும், காத்து வந்த காவல்மரம். கடைக்கழகக் காலத்தில், கடிமரம் ஓர் அரசச் சின்னம் போன்றே கருதப்பட்ட தாயினும், முந்துகாலத்தில் அது அரசக் குடியைக் காக்கும் தெய்வமாகவே வணங்கப் பட்டிருத்தல் வேண்டும். பண்டைக் காலக் கடிமரங்களுள் கடம்பு ஒன்று. அதைக் கொண்டவர் கடம்பர். பிற்காலத்தில் அரசமரம் தெய்வத்தன்மை யுள்ளதாகப் பொதுமக்களாற் கருதப்பட்டதும், பிள்ளைப்பேறு வேண்டிய பெண்டிர் அரசமரத்தைச் சுற்றி வந்ததும், "அரசமரத்தைச் சுற்றி வந்ததும் அடிவயிற்றைத் 'தொட்டுப் பார்த்தாளாம். என்னும் பழமொழியும், இக்கொள்கையை வலியுறுத்தும். (௩) நாற்பூதம் நிலம் நிலம் மக்களைத் தாங்குவத னாலும், உணவு விளையும் இடமா யிருப்பதனாலும், இறுதியில் எல்லா வுடம்பும் அதற்குள் ஓடுங்கு வதனாலும், தாயாகக் கருதப் பட்டது. ‘நிலமக எழுத காஞ்சியும்" (புறம்.உகூரு). உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவை விளைவிப்ப தாயும், தானும் குடிக்கப்படுவதாயும், உடம்பையும் பொருள் களையும் துப்புரவு செய்வதாயும், சமைக்க வுதவுவதாயும், உள்ள நீர்நிலை, எங்குங் காணப்படாமையால், ஆண்டு முழுதும்' ஓடிக்கொண்டிருக்கும் பேராறுகள் தெய்வமாக வணங்கப்பட்டன. குமரிமலையும் பஃறுளியாறும் கடலுள் மூழ்கினபின், கங் கையே நாவலந்தேயத் தலைமைப் பேராறானமையின், அது ஒரு தாயாக அல்லது பெண்தெய்வமாக வணங்கப்பட்டது.
பக்கம்:தமிழர் மதம்.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
