பக்கம்:தமிழர் மதம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் 'கங்கையம்மன் என்பது இன்றும் ஒரு சிற்றூர்த் தெய்வம். ஆற்றுநீரை மிகுதியாகப் பயன்படுத்துபவர் வேளாள ராதலின், அவர் கங்கை புதல்வர் எனப்பட்டனர். அவர்குலம் கங்கை குலம் எனப்பட்டது. கங்கை நாடு ஆரியநாடாக மாறியபின், வேளாளர் காவிரி புதல்வர் எனப்பட்டனர். பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்' (சிலப். க0 : கசஅ) $ தீ பல்வகையிற் பெருநன்மை செய்வதுபற்றித் தலைசிறந்த தெய்வமாக வணங்கப்பட்டதனால், தெய்வம் என்னும் பெயரே தீயைக் குறிக்குஞ் சொல்லினீன்றே தோன்றிற்று. மரங்களும் கற்களும் பிறவும் ஒன்றோடொன்று உரசுவதனால் தீப் பிறப்பதைக் கண்டனர். அதனால், ஞெலிகோல் என்னும் தீக்கடை கோலால் தீயுண்டாக்கும் வழியைக் கண்டுபிடித்தனர். பொருள்களின் உராய்வினால் தீத் தோன்றலைக் கண்டபின், உராய்தலைக் குறிக்கும் தேய் என்னும் வினையினின்று, தீ என் னும் பெயரும் தெய்வம் என்னும் பெயரும் தோற்றுவிக்கப் பட்டன. தேய்தல் - பொருள்கள் ஒன்றோடொன்று உராய்தல். தேய்-தேயு -உராய்ந்து பற்றும் நெருப்பு. தேயு - தேசு-நெருப்பின் ஒளி, ஒண்மை. தேசு - வ. தேஜஸ். தேய் - தே-க.தெய்வம். (பிங்.). "தேபூசை செய்யுஞ் சித்திரசாலை" (சிவரக. நைமிச. உ0). உ. நாயகன். (இலக். அக.). தே - தீ -க.தெருப்பு. "வளித்தலை இய தீயும்" (புறம்.உ). உ.விளக்கு."தீத்துரீஇ யற்று (குறள். கூடகூ). ௩. வயிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/37&oldid=1428891" இலிருந்து மீள்விக்கப்பட்டது