பக்கம்:தமிழர் மதம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் உலக விளக்காக விருந்து உயிர் வாழ்க்கை நடைபெறச் செய்யும் கதிரவன், தீயின் கூறாக விருப்பதனாலும் பெருஞ்சிறப் புப் பெறுவதாயிற்று. அதனால், தெய்வப் பெயரினின்று கதிர வன் பெயரொன்றும் தோன்றிற்று. கள்ளுதல் - எரிதல், காய்தல், சுடுதல். சுள் - சுள்ளி - காய்ந்த குச்சு. சுள் - சுள்ளை = கலமுஞ் செங்கலும் சுடும் காளவாய். சுள்ளை-சூளை. சுள்ளென்று வெயிலடிக்கிறது என்று, இன்றுஞ் சொல்லும் உலக வழக்கை நோக்குக. சுள்- வ. ஸுஷ்+ சுள் - கர் - சுறு - சுடு - சுடல் -சுடலை. சுர் -சுரம் = சுடும் பாலை நிலம், உடம்பு சுடும் காய்ச்சல் நோய். சுரம் -வ. ஜ்வர. நெருப்பைத் தொட்டவர், சுரீர் என்று சுட்டுவிட்டதென்று இன்றுஞ் சொல்லுதலைக் காண்க. சுரம்-சுரன் - தீ வடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். சுரன்-வ. ஸுர. சுரன்-சூரன் - க. நெருப்பு.(பிங்.).உ. கதிரவன். (பிங்.) "காதற் சூரனை யனைய சூரா” (பாரத. பதினேழாம். கூ). சூரன்- வ. ஸூர்ய. ளகரம் லகரத்தின் திரிபு வளர்ச்சி யாதலால், சுள் என்பதன் மூலம் சுல் என்பதே. L. sol, E. sun, OE. sunne, sunna, ON. sunna, OS., OHG. sunno, sunna, Goth. sunno. ஒரே மூலத்தினின்று திரிந்த வடசொற்கள், ஸுர என்றும் ஜ்வர என்றும் முதலெழுத்து வேறுபட்டிருத்தலை, ஊன்றி நோக்கி உண்மை தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/41&oldid=1428895" இலிருந்து மீள்விக்கப்பட்டது