பக்கம்:தமிழர் மதம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிதிலை யியல் மால் - க.கருமை. "மால் கடல்'" (பெரும்பாண். சஅஎ). உ.கருமுகில். "சிலைமா லுருமு (தஞ்சை வா.ககூச). ௩. கரியவ னான திருமால். "நீர்செல நிமிர்ந்த மாஅல் போல" (முல்லைப்.ங). மால் என்னும் தெய்வப் பெயர், உலகவழக்கில் என்றும் திருமால் என்று அடைபெற்றே வழங்கும். மாலை மாயோன் என் னுஞ் சொல்லாலுங் குறிப்பது இலக்கிய வழக்கு. மாயன் மாய வன் என்பன மாயோன் என்பதன் மறு வடிவங்கள். மால் மாயன் என்னும் இரண்டும் ஒரே மூலத்தினின்று தோன்றிய ஒருபொருட் சொற்கள். மால்-மா-மாயோன் - கரியவன். 56 மருதத் தெய்வம் குமரி நாட்டு மருதநில மக்கள், முதன் முதலாக மறுமையைப் பற்றிக் கருதி, இவ்வுலகில் தீவினையை விட்டு நல்வினை செய்து வாழ்பவன் மறுமையில் மேலுலகத்தில் தேவனாய்ப் பிறப்பா னென்றும், தீவினை செய்பவன் எரிநரகில் வீழ்வானென்றும், விண்ணுலகக் கொள்கையும் எரிநரகக் கொள்கையுங் கொண்ட னர். நல்வினைகளுட் சிறந்த விருந்தோம்பற்கு ஏராளமாக உண வுப் பொருள் வேண்டுமாதலால், அதை விளைக்கக் கூடிய உழ வர்க்கே அவ்வினை சிறப்பாக வுரிய தென்றுங் கருதப்பட்டது. உழவனே விருந்தோம்பி வேளாண்மை செய்து வந்ததனால், அவன் வேளாளன் என்னப்பட்டான். இவ் விருந்தோம்பற் பண்பு வழிவழி வளர்ந்து வந்ததனால், "வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்." என்னுங் கொள்கை நிலைத்து விட்டது. இம்மையில் இல்லத்தி லிருந்து அறஞ் செய்து வாழ்பவன், மறுமையில் தேவனாய்ப் பிறப்பது திண்ணம் என்பதை உணர்த் தற்கே, "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.33 என்றார் திருவள்ளுவர். (குறள். ரு0).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/47&oldid=1428900" இலிருந்து மீள்விக்கப்பட்டது