தமிழர் மதம் இல்லறத்தைச் சிறப்பாக நடத்தும் பொதுமக்களான வேளா ளர், மறுமையில் தேவருலகில் தேவராகத் தோன்றுவாரெனின், இம்மையில் வேந்தனாக விருந்து அற வாழ்க்கை நடத்தினவன், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்னும் கொள்கையும் எழுந்தது. அதனால், தேவர் கோனைத் தேவர் வேந்தன் என்றனர். அப்பெயர் பின்னர் வேந்தன் என்றே குறுகி வழங்கிற்று. "வேந்தன் மேய தீம்புன லுலகமும்'" என்று தொல்காப்பி யம் (கூடுக) கூறுதல் காண்க. வேந்தன் வணக்கம் குமரி நாட்டிலேயே தோன்றி விட்ட தனால், முதற் பாண்டியனே வேந்தனாகக் கொள்ளப் பட்டிருத்தல் வேண்டும். அவனுக்குப் படை வயிரவாள்; ஊர்தி வெள்ளை யானை. தேவ நிலையங்கட்குக் கோட்டம் என்று பெயரிருப்பினும், கோவில் என்னும் பெயரே உலக வழக்காகவும் பெரும்பான்மை விலக்கிய வழக்காகவும் வழங்கற்கு, வேந்தன் வணக்கமே கரணியமா யிருந்திருத்தல் வேண்டும். கோ=அரசன். இல்- மனை. கோ + இல் - கோவில் - கோயில். உழவுத் தொழிற்கு இன்றியமையா த மழை விண்ணி லிருந்தே பெய்வதால், விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரியானான். ஆண்டு தோறும் வேந்தன் விழா மூவேந்தர் நாட்டிலும் கொண் டாடப்பட்டது. அதை வேந்தரே நடத்தி வந்தனர். சிவமத மும் திருமால் மதமும் தோன்றியபின், வேந்தன்விழா படிப்படி யாகக் கைவிடப்பட்டது. இறுதியாக அதை நடத்திவந்தவர் புகார்ச் சோழரே. ஆரியர் (பிராமணர்) தென்னாடு வந்தபின், வேந்தன் விழா வடநாட்டிற் போன்றே இந்திரவிழா எனப் பட்டது. அரசன் செங்கோ லாட்சி செய்தால், ஆண்டு தோறும் தப்பாது மழை பெய்யும் என்பது பண்டையோர் நம்பிக்கை. செங்கோ லாட்சியிலும் மழை பெய்யாது பயிர்கள் தீயின், அதற்குக் கொடுந்தீய வனா யிருந்தவனே கரணியமென்று அவனைக் கட்டியிழுத்து எரிப்பது வழக்கம். இன்று அஃதியலாமை யால், கந்து கட்டியிழுத்தெரிக்கின்றனர் பாண்டி நாட்டுழவர்.
பக்கம்:தமிழர் மதம்.pdf/48
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
