பக்கம்:தமிழர் மதம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் அம் - அம்பு - அம்பல் - க. கூடுதல், கூட்டம். ஒ.நோ: உம் -கும் -கும்பு -கும்பல். அவை, கூடுமிடம்,மன்றம். அம்பல் - அம்பலம் = கூட்டம், சங உ.குவிதல், குவிந்த அரும்பு அல்லது மொட்டு. "அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல். (இறை, உஉ, உரை).ஓ.நோ: கும் --கும்பு--கூம்பு. கும்-குமி-குவி. ௩. அரும்பு போன்ற சில ருரை பழி. "அம்பலும் அலருங் களவு வெளிப் படுத்தலின் '" (தொல். கள. சஅ). அம்பலும் அலரும் களவு.' (இறை. உஉ). ம. அம்பலம், க. அம்பல, து. அம்பில, வ. அம்பர. வடசொல்லில் லகரம் ரகரமாகத் திரிந்திருத்தல் காண்க. அத் திரிசொல்லையே அம்பலம் என்னும் இயற் சொல்லிற்கு மூல மாகச் சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியிற் காட்டியிருப் பது, இற்றைத் தமிழரின் இழிவான அடிமைத் தனத்தையே காட்டும். சிவ வழிபாட்டு வடிவம் சிவனுடைய ஐவகை வடிவுக ளுள்ளும், பொது மக்கள் வழி பாட்டிற் கேற்றது அம்மையப்ப வடிவமே. சிவ வழிபாட்டு முறை காலையிற் குளித்து, உண்ணுமுன், தீய நினைவின்றி அமைந்த வுள்ளத்துடன் அக்க மாலை யணிந்து திருநீறு பூசிச் சிவப் படிமை முன் நின்று, இயலும் போதெல்லாம் தேங்கா யுடைத்து வாழைப் பழத்துடன் படைத்து, நறும்புகை காட்டிப் பூச்சாத்திக் கை குவித்து, (ஓம் என்னும் முளை மந்திரத்தை முன்னிட்ட) சிவ போற்றி என்னுத் திருவைந் தெழுத்தை ஓதி, பல்வேறு போற்றித் தொடர்களால் வழுத்தி, நெடுஞ்சாண்கிடை வணக்கஞ் செய்து எழுந்திருப்பதே சிறந்த முறைப்பட்ட சிவ வழிபாடாகக் கொள்ளப்பட்டது. உழவரும் உழைப்பாளிகளும் தொழிலாளரும் காலையில் சிவ வணக்கம் மட்டும் செய்ய முடியும். திருநாட்களிலும் திருவிழாக் காலத்திலும் எல்லாரும் கோவில் வழிபாடு செய்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/59&oldid=1428916" இலிருந்து மீள்விக்கப்பட்டது