பக்கம்:தமிழர் மதம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை 644 திருமுல்லை வாயில் திகழ்முல்லை வாணன் மருவில்லாண் முல்லை மறவன்-திருமுல்லை மூவா யிரமேலும் மொய்த்தவொரு நூறுருபா தூவா தளித்தான் தொகுத்து. எங்கேனு மாரு இயன்முல்லை வாணன்சேர் சிங்கைத் தமிழன்பர் செய்கைகாண் - அங்கே இலங்கரச மும்மொழியுள் இன்றமிழும் ஒன்றம் இலங்கையிலு மில்லாத ஏண். அரிமா புரமென்னும் அத்திருத் தீவில் வரிமா நிகர்முல்லை வாணன்-வரிமாண் 'தமிழருவி' பாடித் தமிழருவி பாய இமிழிசையிற் செய்தான் இனிது. மதத்தை மதியாது மாய்க்கவெனும் இக்கால் மதர்த்த தமிழர் மதநூல் - பதிக்கவெனத் தானாகத் தண்டித்தந் தான்முல்லை வாணன்தான் ஏனோரைக் காணாத இன்று. தமிழே யுயிராகத் தாமூட லாக இமிழுங் கடல்சூழ் இகமேல் - தமிழர் இருக்கின்றா ரின்றும் இதுமுல்லை வாணன் தருக்கொன்றும் வாழ்வின் தகை. கான்மணியும் பாடுங் கடிகாரம் வான்சுவரில் நான்மணியா யாடி நளியிருளும்-கேண்மணியாய் இன்னிசையின் முந்தி யெழுவிக்க இந்தான்நான் முன்னியவா முல்லைவா ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/7&oldid=1428840" இலிருந்து மீள்விக்கப்பட்டது