பக்கம்:தமிழர் மதம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II இடைநிலையியல் - ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு. கரு00. அவரது வேதக் காலம் கி. மு. கரு00-க2,00. க. ஆரியத் தெய்வங்கள் தியசு (த்யஸ்-Dyas) ஒளியுள்ள வானம், வானம், வானத் தெய்வம். இச்சொல் த்யௌஸ் (Dyaus), த்யௌஷ் (Dysush) என்ற வடிவுகளிலும் வழங்கும். தீயும் தீபோல் ஒளிதரும் சுடர்களும் ஒளி வடிவான தோற் றங்களும், முதற்காலத்தில் உலகமெங்கும் தெய்வங்களாக வணங்கப் பட்டன. குமரிநாட்டில் தீ வணக்கமும் கதிரவன் வணக்கமும் தோன்றிப் பரவிய காலத்தில், ஆரியரின் முன்னோர் ஐரோப்பாவிற்குப் பிரித்து போயினர். அதனால், மேலை யாரி யரும் கீழை யாரியரும் பிரியு முன்னரே, சுடர்க ளெல்லாந்தோன் றும் வானத்தை ஒரு மூலத் தெய்வமாகக் கொண்டு, அதை வணங்கி வந்தனர். ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே, கிரேக்கமும் இலத்தீனும் வேத ஆரியமும் தோன்று முன்னரே, ஐரோப்பிய ஆரியர் வானத் தெய்வத்தைத் த்யுபாதர் (வானத் தந்தை) என்று பெயரிட்டு வணங்கி வந்ததாகவும்; அப் பெயர்(Dyu patar) வேத ஆரியத்தில் Dyaush Pitar என்றும், கிரேக்கத்தில் Zeus pater என்றும், இலத்தீனில் Japiter என்றும், பழைய நார்வேயத்தில் Tyr என்றும், திரிந்துள்ள தாகவும்; மாகசு முல்லர் (Max Muller) கூறுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/75&oldid=1428939" இலிருந்து மீள்விக்கப்பட்டது