பக்கம்:தமிழர் மதம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் தேயு அல்லது தெய்வு (தெய்வம்) என்னும் தென்சொல் நியூ அல்லது த்யு என்றும், தேவு என்னும் தென்சொல் திவ் என்றும், ஆரியத்தில் திரிந்துள்ளன. கடு எ - டு : L. deus, divus, divinus. வே. ஆ. த்யு, த்யஸ், திவ், திவ. திவ் என்னும் மூலத்தி னின்று, ஒளியுள்ள இடத்தையுங் காலத்தையுங் குறிக்கும் இந்திய ஆரியச் சொற்கள் தோன்றி யுள்ளன. திவ-வானம், நாள் (பகல்) வே. ஆ. திவன், திவஸ், திவஸநாள் (சமற்கிருதம்). திவாகரன் - பகலைச் செய்பவன், பகலவன். தேவன் என்னும் தென்சொல், பிராகிருதத்தில் தேவ் என் றும், வேத ஆரியத்தில் தேவ என்றும், திரியும். பிருதுவி (ப்ருத்வி). நிலமகள். த்யாவா-ப்ருத்வீ என்று வானத் தந்தையுடன் இணைத்து விளிக்கப்படுபவள். புடவி-வ.ப்ருத்வீ. அதிதி (Aditi) "அதிதி என்பவள் ஒரு பெண் தேவதை. அவட்கு மித்திரன், வருணன் முதலிய எட்டுப் பிள்ளைகள் உளர். அவள் உலகத்திற் கெல்லாம் நன்மை யளிக்கின்றாள் என்ற காரணத்தால் ‘விச்வ ஐந்யா' எனக் கூறப்படுகிறாள். சுகத்தை அளிக்கவும் பாபத் தைப் போக்கவும் வேண்டப் படுகின்றாள்.) (வ.நூ.வ.). வருணன் (வருண இருக்கு வேத காலத்திற் சிறந்த தெய்வம் வருணனே. ‘‘அவரே பேரரசன். அவரது ஆனைப் படியே சூரியன் தன் வழி யிற் சென்று பிரகாசிப்பான். சந்திரனும் நக்ஷத்திரங்களும் இர விற் பிரகாசிக்கும்; நதிகள் ஒரே வகையாக ஓடும். ஜலத்திற்கு அரசன் அவரே. பறவைகள், கப்பல்கள் இவற்றின் கதியை அவரே அறிவர். பிறர் செய்த செயலையும் செய்யப் போகுஞ் செயலையும் அறிவர், பூமியையும் ஸுவர் லோகத்தையும் இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/76&oldid=1428940" இலிருந்து மீள்விக்கப்பட்டது