இடைநிலை யியல் அக கழுத்திற் கரு நிறமும், தாருக வனக் கதையாற் கரி யுரிப் போர்வையும், பிரமன் தலை கொய்த கதையாற்கையில் மண்டை யோடும், பிராமண வொப்புமையாற் ணூலுல் குடுவையும், தமிழச் சிவன் வடிவை ஆரிய வடிவாக மாற்றின. இக் கதைகளால், கங்கை யணிந்தோன் (கங்காதரன்), மதி சூடி, பிறை சூடி (சந்திர சேகரன்), மதி யழகன் (சோம சுந்தரன்), கறை மிடற்றோன், மணி மிடற்றோன் (நீல கண்டன்), மண்டை யேந்தி (காபாலீ), இரப்பெடுத்தோன் (பிச்சாடனன்) முதலிய பெயர்கள் தோன்றின. பிராமணர் ("முட்டி புகும் பார்ப்பார்" என்று பழிக்கப் பட்டதனால், அப் பழிப்பை நீக்கச் சிவ பெருமானையும் ஓர் இரப் போனாக்கி விட்டனர். தாருக வனக் கதையால், அரி யரன் (ஹரி ஹரன்), சிவ மால் (சங்கர நாராயணன்) என்னும் பெயர்களும் தோன்றின. திருமாலுக்கு, நரன் மகன் (நாராயணன்), அரவனையன் ( ேச ஷூ சா யி) முதலிய பெயர்களுடன், தோற்றரவுக் கதை கள் பற்றிய பல் வேறு பெயர்களும் தோன்றின. சிவ வழிபாட்டிற்குத் தமிழர் கொண்ட வடிவுகள், குறி, அம்மையப்பன், விடையேறி, நடமன், குரவன் அல்லது அந் தணன் என்னும் ஐந்தே. ஆயின், ஆரியர் இவற்றொடு ஏனைய வற்றையுஞ் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தென வகுத்து விட்டனர். திருமால் வழிபாட்டிற்குத் தோற்றரவுக் கதைகளாற் பல் வேறு வடிவங்கள் ஏற்பட்டன. (கூ) தெய்வப் பெயர் மாற்றம் சிவன் பெயர்கள்: தமிழ் அடியார்க்கு நல்லான் அம்மை யப்பன் எ-டு: சமற் கிருதம் பத்த வற்சலன் (பகத வத்சல) சரம் சிவன், சாம்ப மூர்த்தி
பக்கம்:தமிழர் மதம்.pdf/99
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
