பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




காற்று –
ஷெல்லியும் பாரதியும்

ஒட் (ode) என்பது ஆங்கிலக் கவிதை உருவங்களில் ஒன்று. கடல், காற்று, வானம்பாடி, நைட்டிங்கேல், (பறவை) முதலியவற்றை முன்னிலையாகப் புகழ்ந்து, தமது உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் வெளியிடுவதற்கு இவ்வுருவத்தை ஆங்கிலக் கவிஞர்கள் கையாண்டுள்ளார்கள்.

ஷெல்லியின் ‘மேல் காற்றிற்கு’ (To the westwind) கீட்வின் ‘நைட்டிங்கேலுக்கு’ என்ற முன்னிலைப் பனுவல்கள் ஆங்கில இலக்கியத்தின் அழகுமிக்க படைப்புகள்.

இச்சிறு கட்டுரையில் ஷெல்லியின் ‘மேல் காற்றை’யும், பாரதியின் ‘காற்று’ என்ற கவிதையையும் ஒப்பு நோக்கி இருவரும் ஒரே பொருளைக் கவிதைப் பொருளாகக் கையாண்டிருக்கும் முறையைக் கவனிப்போம். ஷெல்லி 1792 முதல் 1822 வரை வாழ்ந்தவன். இங்கிலாந்தில் முதலாளி வர்க்கம் வளர்ச்சி பெற்ற காலத்தில் பாடியவன், வளர்ச்சி பெறும் காலத்தில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடக் கையாண்ட தத்துவங்களிலும், கோஷங்களிலும் நெஞ்சைப் பறி கொடுத்தவன். சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் என்ற உயர்ந்த லட்சியங்களில் நம்பிக்கை கொண்டவன். நிலப்பிரபுத்துவம் மக்களின் ஆன்மாக்களை அழுத்தி வதைக்கிறது என்று எண்ணி அதன் விடுதலைக்காகப் போராட எண்ணியவன். சுதந்திரம் என்ற அருவமான லட்சியத்தை வழிபட்டவன். இம்மூன்று கொள்கைகளின் அடிப்படையில் உலகத்தைப் படைக்க ஆர்வம் கொண்டவன். இவ்வாறான இளமைச் சிந்தனைகளில் கவிதைச் சிறகுகளால் பறந்து கண்ட புதிய கற்பனை உலகை நனவாக்கப் பேராசை கண்டவன்.

ஆனால் கற்பனை மட்டும் லட்சியத்தை அடைய உதவுவது இல்லை. முதலாளித்துவ சித்தாந்தங்களின் போலித்தன்மையை அவன் எளிதில் உணர்ந்தான். இனிய சொற்களுக்குப் பின்னே மறைந்திருக்கும்

105