பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பவளக்கொடிமாலை

இக்கதையின் தொடர்ச்சியே பவளக்கொடி மாலை, அல்லியோடு சிறிது நாள் தங்கியிருந்து விட்டு அருச்சுனன் பாரதப் போர் நடத்தப்போய் விடுகிறான். போர் முடிந்து வெற்றி பெற்றுச் சில ஆண்டுகளுக்குப் பின், அல்லியிடமிருந்து, குழந்தை புலந்திரனைப் பார்க்க வர வேண்டுமென்று அவனுக்கு அழைப்பு வருகிறது. அவன் குழந்தையைக் காண மதுரைக்கு வருகிறான். குழந்தை பவளத்தேர் வேண்டுமென்று அழுகிறான். அருச்சுனன் பவளம் தேடி பவளக்கொடி காட்டிற்குச் செல்லுகிறான். பவளக் காட்டின் ராணி பவளக்கொடியைப் பார்க்கிறான். காதல் கொள்ளுகிறான் பல இடையூறுகளைச் சமாளித்துப் பவளம் பெற்று வருகிறான். பின் அவளையும் மணந்து கொள்ளுகிறான். இப்படி ருசிகரமாகக் கதை செல்லுகின்றது. இடையில் பவளக்கொடியோடு போராடி விஜயன் இறந்து போகிறான். தருமரும், கிருஷ்ணனும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். பவளக் காட்டில் இறந்து கிடக்கும் விஜயனை உயிர்ப்பிக்கிறார்கள். கடைசியில் பவளக்கொடி விஜயனை மணந்து கொள்ளுகிறாள்.

பொன்னுருவி மசக்கை

மூன்றாவது கதை பொன்னுருவி மசக்கை. கருணனது மனைவிக்கும், கருணனுக்கும் நடக்கும் குடும்பச் சண்டையைப் பொருளாகக் கொண்டது. நிகழ்ச்சிகள் இந்திரப் பிரஸ்தத்திலும், தமிழ் நாட்டிலும் நடைபெறுகின்றன. கடைசியில் கருவங் கொண்ட மனைவியைக் கருணன் அடி உதையால் பணிய வைக்கிறான்.

ஏணி ஏற்றம்

நான்காவது கதை ஏணியேற்றம். இது அஞ்ஞாத வாச காலத்து நிகழ்ச்சியொன்றைப் பொருளாகக் கொண்டது. அர்ச்சுனன் மனைவி சுபத்திரை மீது துரியோதனன் இச்சை கொள்ளுகிறான். அவனுடைய தீய எண்ணத்தை அறிந்த சுபத்திரை மதுரையிலுள்ள தனது சகமனைவி அல்லியிடம் சரண்புகுகிறாள். அவள் மதுரை சென்றதையறிந்து துரியோதனன் அங்கு வருகிறான். அவனைத் தண்டிக்க வேண்டுமென்ற

123