பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவ்வுணர்வைச் சிலப்பதிகாரம் பலவகையில் புலப்படுத்துகிறது. கதையில் மூன்று காண்டங்களும் முடியரசர் மூவருடைய தலை நகரங்களில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறுகின்றன. புகார்க் காண்டம் சோழ நாட்டில் நடைபெறும் கதையையும் மதுரை காண்டம் பாண்டிய நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், வஞ்சிக் காண்டம் சேர நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் விவரிக்கின்றன. ஒவ்வொரு காண்டமும் அந்தந்த நாட்டின் கலை வளர்ச்சியையும் பண்பாட்டையும் புலப்படுத்துகின்றன. வாழ்த்துக் காதையில் மூன்று மன்னர்களும் வாழ்த்தப் பெறுகிறார்கள்,

‘வாழியரோ வாழி
வருபுனல் நீர்ப் பொருநை
சூழும் மதுரையார்
கோமான்றன் தொல் குலமே!’
‘வாழியரோ வாழி
வருபுனல் நீர்த்தண் பொருநை
சூழ் தரும் வஞ்சியர்
கோமான்தன் தொல் குலமே!’
‘எல்லா நாம்’
காவிரி நாடனைப் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்’

ஒல்வோர் காண்ட முடிவுக் கட்டுரையிலும், முறையே சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவரும் போற்றிப் பாடப்பட்டுள்ளனர். இனி நூல்கட்டுரையில், தமிழ்நாடு முழுவதற்கும் பொதுவான ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் மலையைக் கண்ணாடியிற் காட்டுவது போல இந்நூல் காட்டுகிறதென இளங்கோவடிகள் கூறுகிறார். தமிழ் நாட்டை ஒரு நாடாகக் குறிப்பிடும் அடிகள் வருமாறு:

‘குமரி வேங்கடங்
குண குட கடலா


52