பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டு வாணிகம் கி. மு. 1000 500 101 "இந்திய முன்னோர்கள், உயிரினங்களைக் கடல் வழியாகப் பாரசீக வளைகுடாப் பகுதிக்கும், ஆப்பிரிக்க, சீன நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். (J.R.A.S. 1920, Page; 147) வண்டிகளை ஈர்க்கவும், பொதிகளைச் சுமக்கவும், ஊர்ந்து செல்லவும் பயன்படுத்தப்பட்ட முதுகில் திமில் உடைய இந்தியக் கால் நடைகள், பர்ஷியா, சிரியா, ஆப்பிரிக்க நாடுகளின், வீட்டுவளர்ப்புக் கால்நடைகளின் ஒரு பகுதியாம் வண்ணம், நில வழியாக, மேற்குநோக்கிப் பரவியது இயற்கையே. இவ்வகையால், அஸிரியா, மற்றும் அதற்குப் பிற்பட்ட காலக்கலைகளில், அவற்றின் உருவமைப்புகளை நாம் காண்கிறோம்" எனத் திருவாளர் வார்மிங்டன் குறிப்பிடுகிறார். (J.R.A.S, 1910.Page:149-150 இந்தியர்களால் மேற்குநோக்கி அனுப்பப்ப்ட்ட விலங்குதரு பொருள்களில், சிங்கம், புலி, சிறுத்தைகளின் நேர்த்தியான தோல்களும் இருந்தன என்றும் நாம் நம்பலாம். (J.R.A.S, 1910 Page:159). குறைந்த அளவான எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுத் தேவை மிகுதியாகிவிடுவது இயல்பாகிவிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு நெய்யும், எள் எண்ணெய்யும் பிற்காலத்தில் அனுப்பப்பட்டன. கி.பி. முதல் ஆண்டைய உண்மை நிலை இது. பழங்காலத்து நிலையும் இதுவாகவே @(5òóg5ó@jtb [Periplus: page: 41]. - பிற பண்டங்கள் : இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவற்றுள், நறுஞ்சுவை மண மருந்துப் பொருள்கள், உணவிற்கு மணம் காரம் ஊட்டும் பொருள்கள் ஆகிய இரண்டும், மிகுந்த மதிப்புடைய விளை பொருள்கள். திருவாளர் வார்மிங்டன் கூறுவதுபோல, அரேபியர், இப்பொருள்களைத் தங்கள் தீபகற்பத்தின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குக் கொண்டு செல்வது, பல நூற்றாண்டுக்காலம் நடைபெற்றது. பழைய பொயினிஷியன் கப்பல்களில், மிளகே, மிக முக்கியமான வணிகப் பண்டம். நனி மிகப் பழங்காலத்திலிருந்தே, லவங்கப்பட்டை, இந்தியக் கப்பல்களில், சோமாலி