பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடக்கும் தெற்கும். கி. மு. 500 .... 1 வரை - 113 குறிப்பிடும்போது, கெளடல்லியர், தாம்பரபரணி, பாண்டியகாவடகா மற்றும் சூர்ணா (இது, பிற்காலத்தே உரையாசிரியரால், "முரசி' அதாவது கேரள நாட்டில் உள்ள முசிறிக்கு அணித்தாக ஒடும் ஆறு என விளக்கம் அளிக்கப்பட்டுளது) ஆகிய இடங்களிலிருந்து வந்த இரத்தினங்கள் (அர்த்தசாஸ்திரம் : 11 26 : 2) பல்வேறு வண்ணங்களில் ஆன வைடுரியங்கள் மேற்படி 26 : 30 (ஓர் உரையாசிரியர் இது, ஸ்திரிராஜ்யத்திலிருந்து அதாவது மலபாரிலிருந்து வந்ததாகக் கொள்வர்) பட்டை தீட்டப் பெற்ற மாணிக்கக்கல்லின் மேனி போல் மெத்தென்றிருக்கும். கருமை நிறம் வாய்ந்த பெளண்ட் ரகக் கம்பளங்கள், அர்த்த சாஸ்திர மொழி பெயர்ப்பாளராகிய காமா சாஸ்திரி யார் இவை பாண்டி நாட்டுச் செய்பொருள்கள் என்கிறார்) (பக்: 90). மற்றும் மதுரையில் இருந்து வந்த பருத்தி ஆடைகள் <gstuiausò sopš GÉNÉ1911 @sirom trit. [Arthasastra : Jolly and Schmidt. ii. 26. 119] . - - சந்திரகுப்தனும் தென் இந்தியாவும் : கி.மு. நான்காம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் உலகம் அறிந்த நனிமிகு புகழ்வாய்ந்த சந்திரகுப்தன், ஒரு நூற்றாண்டின் கால்கூறு காலத்திய ஒளிமயமான ஆட்சிக்குப் பின்னர், இந்தியப் பேரரசர் பலரையும் போலவே, வைராக்கிய மாகிய நோயால் திடுமெனப் பற்றிக் கொள்ளப்பட்டு, ஒரே இரவில் வாளையும் முடியையும் துறந்து சமணத்துறவியாகி பத்ரபாகுவின் 12,000 மாணவர்களில் ஒருவராகிவிட்டான். தன் குருவோடும், தன்னொத்த மாணவர்களோடும், மைசூர் மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள சரவண பெல்கோலா வைக் கால்கடுக்க நடந்து அடைந்தான். ஏனையோர் ஆங்கிருந்து பாண்டிய, சோழ நாடுகளுக்குச் சென்றனராக, பத்ரபாகுவும், சந்திரகுப்தனும் ஆங்கேயே தங்கிவிட்டனர். ஆங்குப் பிச்சைக்காரனாக மாறிவிட்ட அப்பேரரசன், தன் குரு இறக்கும் வரை, அவருக்குத் தேவையானவற்றை அளித்துப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். சந்திர