பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழர் வரலாறு கலிங்கமும் தென் இந்தியாவும் : விதி, எப்போதும்போல விளையாடிவிடவே, அசோகன் கடைப்பிடித்த தர்மம், அவன் இறப்பிற்குப் பின்னர், அவன் பேரரசைச் சிதறுறச் செய்துவிட்டது. அவ்வகையில் தன்னாட்சி பெற்ற நாடுகளில் கலிங்கமும் ஒன்று. அதன் அரசன் காரவேலன் (கி.மு. 200) பாண்டி நாடுவரையும் சென்று பரவிய பெரும் புகழ்ச்சிக்கு உரியவனாகிவிட்டான். அங்கிருந்து குதிரைகள், இரத்தினங்கள், முத்துகள், நீலக்கல் மட்டுமல்லாமல்,அவற்றைச் சுமந்துவந்த யானைகளும் கப்பல்களும் அவனுக்குப் பரிசுப் பொருட்களாகக் கிடைத் தன. குதிரைகளையும், யானைகளையும், மாணிக்கங்களையும் ஏற்றிக் கொண்டு, வியத்தகு யானைக் கப்பல்களும் கொண்டு வரப்பட்டன. முத்துகள், நீலமணிகளோடு இவற்றையும் பாண்டிய அரசன் அனுப்பிவைத்தான். அப்ஹ"த அசரியம் அத்தினாவன் பாரிபுரம் யு(ப) தென்ஹ ஹய ஹதி ரத்ன (மா) நிகம் பண்டராஜா எதானி அனெகானி முதமணிரத்னாளி ஹராபயதி இத்ஹ சத ச) (ஹதிகும்பா கல்வெட்டுகள், J. B. O. R. S. iv. 401]