பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$28 x * . - தமிழர் வரலாறு என்றே நிதிஒதுக்கம் செய்து வைத்தனர். பர்ஷியாவைச் சேர்ந்த இந்திய வேட்டை நாய்களும், அவைபோலும் வேறு நாய்களும், தாலமி, பிலடெல்பாஸ் வெற்றி ஊர்வலத்தில் காணப்பட்டதாக, திரு. ஸ்டெசியாஸ் (Ctesias) குறிப்பிடு கிறார். கொடிய கரடியோடு நடத்திய போராட்டத்தில், தன் தலைவனைக் காப்பதற்காகத் தன் உயிரைக் கொடுத்த 'டவ்ரான் (Tawron) என்ற வேட்டைநாய் குறித்துப் பாடிய இரண்டு கையறு நிலைச் செய்யுள்கள் எழுதப்பட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, நாணற்புல் தாளினாலான கையெழுத்துப்படி ஒன்றும் கிடைத்துள்ளது". (Warmington. Page : 149). தென் இந்திய வேட்டை நாய்கள், அவற்றின் முரட்டுத்தனத்திற்காகவே நன்கு தெரிந்திருந்தன. பொதுவாக அவை, "கதநாய்" (கடுஞ்சின நாய், விரைந்தோடும் நாய்) என்றே அழைக்கப்படும். ("கத நாய்வடுகர்’ அகம்: 107 : 1) அவை, சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும். அவ்வாறு நாய் கட்டப்பட்டிருக்கும் வீட்டினுள் எவரும் எளிதில் புக இயலாது. காவலில் அத்துணைக் கடுமையானது நாய். ("தொடர்படு ஞமலி" புறம் : 743) "தொடர் நாயாத்த துன்னரும் கடிநகர்” (பெரும்பாணாற்றுப்படை - 125) தாம் குறித்துச் சென்ற பகைவர்களைத் தப் பாது வெற்றி கொள்ளவல்ல வீரர்களுக்குத் தான் குறித்த விலங்குகளைத் தப்பாது கொள்ளும் வேட்டை நாயை உவமை கூறுமளவு தென்னாட்டு வேட்டை நாய்கள் சிறந்தனவாக மதிக்கப் பட்டன. "செல்நா. அன்ன கடுவிறல் சுற்றமொடு, கேளாமன்னர் கடிபுலம் புக்கு". (பெரும்பாண் :139-140). கரடி வேட்டையில் வேட்டை நாய்கள் பயன்படுத்தப் படுதலை, "உயர்ந்த நாகமரங்கள் அடர்ந்து, கடந்து செல்வதற்கு அரிதாகி விட்ட கவர்த்த காட்டு வழியில், சிறிய கண்ணும் பெரிய சினமும் உடைய ஆண் பன்றி, சேற்றில் வீழ்ந்து புரண்டதனால் சேறு பூசப் பெற்ற முதுகில் புழுதியும் படிந்திருக்க அக்கோலத்தோடு விரைந்து ஒடிச் சுருக்கவலை விரித்த பிளப்பில் வீழ்ந்து பட்டதாக, அது கண்ட அளவே, வேட்டை நாய்கள், கூட்டமாக விரைந்து, வலையை அழித்து, பன்றி மீது பாய்ந்து கொன்று கொண்ட இறைச்சிபோக,