பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டு, ... கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை 133 பட்டது. ஆனால், அது ஒர் இந்திய உற்பத்திப் பொருள் என்பதை, மேலைநாட்டவர் உணர்ந்து கொள்ளா வகையில், வெற்றிகரமாக மறைத்துவிட்ட அராபிய இடைத் தரகர்களால் கொண்டு செல்லப்பட்டது. (Warmington Page: 184). கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், ஏன், அதற்கு முன்பேயும் எள்ளெண்ணெய், கிரேக்கர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அது இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது. தாலமிகள் காலத்தில், அது மதிக்கத்தக்க முக்கியத்துவம் உடையதாகி விட்டது (Warmington Page . 206), கிரேக்கக் கோயில்களில் தேங்காய்கள், அதிசயக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருந்தனவாதலின், கிரேக்கத்திற்குத் தேங்காய்களும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது (Warmington Page ; 217). ளேஸ்போக்கெல்ஸ் (Sophocells). அரிசி அடைகள் பற்றிப் பேசுகிறார். ஆகவே, கிரேக்கர், அரிசியையும், அதன் பெயரை யும் தமிழ்நாட்டிலிருந்து பெற்றனர். பல்வேறு பயன் கருதி மரங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மித்ரிடேட்ஸ் மீது (Mithridates) கொண்ட வெற்றி குறித்து எடுத்த விழாவில் இந்தியக் கருங்காலி மரத்தைக் காட்சிப் பொருளாகக் காட்டினான் பாம்பே (Pompey). இந்தியக் கருங்காலி மர வாணிகம் நெடிது நிலைபெற்றிருந்த ஒன்று. இதுவும், மற்ற மரங்களும் பாரசீக வளைகுடாப் பகுதிக்கு, இந்திய வணிகர்களால், கொண்டு செல்லப்பட்டன. கருங்காலி, நாற்காலி, மேசை போலும் தட்டுமுட்டுப் பொருள் களுக்காகவும் உருவச்சிலைகளுக்காகவும் பயன்படுத்தப் பட்டது. இந்தியாவிலிருந்து, குறிப்பாக மலபார், கர்னாடகம், திருவாங்கூர் மற்றும் வேறு சில இடங்களிலிருந்து வந்த, தேக்கு மரங்களைக் கொண்டு, பாரசீக வளைகுடாவில் ஆட்கள் கப்பல்கள் கட்டுவதைத் தியோப்ரஸ்டஸ் காட்டு @priÝ. (Warmington Page:213 -214) “idl_fr_ir" (Madarata) graar அறியப்பட்ட, தைத்த படகுகள் என அழைக்கப்பட்ட, அராபியரின் படகுகள், தென்னை நாரினால், அதாவது தேங்காய் மட்டைகளிலிருந்து எடுத்த நாரினால் en a Gur (Scoff's Periplus Page : 154), g) ; 3, m so கட்டத்தில் பல்வேறு வகையனவான இந்தியக் கற்கள், மேலை