பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 - தமிழர் வரலாறு பலதேவனுக்கு எனக் கட்டப்பட்ட கோயில்கள் வடநாட் டில் இருப்பதாக நாம் கேள்விப்பட்டது இல்லை. ஆனால், காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் அவனுக்கான கோயில்கள், கிருஷ்ணன் கோயிலை அடுத்தடுத்துக் கட்டப்பட்டுள்ளன. "வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன்கோயிலும்" - சிலப்பதிகாரம் : 5 : 71 - 72. "புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம்" - சிலப்பதிகாரம் : 9 : 10, பலதேவன் திருமாலின் படுக்கையாம் அரவின், மறுஅவ தாரம் என்ப. அவ்வரவு நாகர்களைத் தம்மோடு இரண்டறக் கொண்டு நாகராகி விடவே, அதுவும் திருமால் வழிபாட்டு நெறியில் இடம் பெற்றுவிட்டது. இவை புகார் நகரத்துக் கோயில்கள், மதுரையில் "மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்" (சிலப்பதிகாரம் :14:9). இவ்வெடுத்துக் காட்டுக்கள் எல்லாம், பிற்கால இலக்கியங்களிலிருந்தது என்றாலும், அக்கால கட்டத்திலும், வடநாட்டில் பலதேவனுக்குக் கோயில் இல்லை. இவ்வெள்ளைக் கடவுள், தெற்கில்தான் முதன்முதலில் எழுந்தான் என்ற முடிவிற்கு வலிவூட்டுகிறது. தமிழ்நாட்டின் சில சாதியரிடையே "வெள்ளையன்", "வெள்ளான்" என்ற பெயர்கள், இன்றும் பரவலாக இடம் பெற்றுள்ளன. வெள்ளைக் கடவுள் வழிபடப்பெற்று, அவன் பெயர், அவனை வழிபடுவார் மக்களுக்கு இடப்பட்ட காலம் தொட்டு வழக்கில் வந்திருக்க வேண்டும்). இக்கோயில்களே அல்லாமல் கிருஷ்ணன், பலதேவன் ஆகிய இருவரின் தெய்வத் திருமேனிகள் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும் கோயில்களும் உள. அத்தகைய கோயில்களுள் ஒன்றாகிய, மதுரைக்கு வெகு தொலைவில் இல்லாத திருமாலிருஞ் சோலைக்கோயில், பரிபாடலில், பதினைந்தாவது பாட்டில் மிக விரிவாக விளக்கப்பட்டுளது. அது, எடுத்துக்காட்டுவதற்கு இயலா, நெடும்பாட்டு, மேலும் நாம் ஆராய்ந்து கொண்