பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.கி.பி. முதல் ஐந்நூறு ஆண்டுகளில் வெளிநாட்டு வாணிகம் அகஸ்டஸ் காலம் : பேரரசர் அகஸ்டஸ் காலத்தில், ரோம் உடனான இந்திய வாணிகத்தில் மிகப்பெரு வளர்ச்சி இருந்தது. பல்மைரா (Palmyra) வில், உரோமானியரின் செல்வாக்கு உயர்வும், கிழக்கு மேற்கு நாடுகளுக்கிடையிலான வாணிகத்தின் முக்கிய வாணிக மையமாம் அலெக்ஸாண்டிரியாவில், உரோமானிய ஆட்சியின் உறுதிப்பாடும், இவ்வாணிகத்தின் விளைவான வளர்ச்சிக்குக் காரணங்களாயின. பேரரசுகள் நிலைகுலைந்து போவதற்கு முந்த முடிவாக வழிகாட்டும், தங்களுக்குள்ளே எழும் உட்பூசல், இன்னமும் தோன்றவில்லை. ஆகவே, உரோமானிய ஆடவர், மகளிர்களில், புதுநடைப்பானித் தலைவர்களிடையே, கீழ்நாட்டு நாகரிக அரும்பெறல் இன்பப் பொருட்கள்பால், கட்டுப்பாடற்ற இன்ப வேட்கை, தலைவிரித்து ஆடலாயிற்று. உயிர்வாழ் விலங்குகளில் வாணிகம் : இந்தியாவிலிருந்து, உரோமப் பேரரசுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாணிகப் பண்டங்கள் பற்றி, ஏராளமான செய்திகள், அக்காலத்திய, கிரேக்க இலத்தின் நூல்களில் உள்ளன. பாலூட்டி உயிர் வளர்க்கும் விலங்குகள், பறவைகளிலான வாணிகம், நேரிடையாக, நில வழித்தடங்கள் மூலமாக நடைபெற்றது. நவநாகரிக நங்கையர், மதராஸ் மலபார், மற்றும் நீலகிரி வாழ், இந்திய நீண்ட வால்குரங்குகளாம் அனுமான்களை, அன்பு காட்டி வளர்க்கும் ஆசைப் பொருள்களாகக் கொண்டிருந்தனர்.