பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு. வாணிகம் - 143 வணிகர்களால் பரவலாக, வருகை தரப்பெற்ற, தென் னிந்தியாவில் உள்ள சேரநாட்டிலிருந்து பெறப் பட்டவையாகவே கொள்ளப்படல் வேண்டும்" (Warmington. Page . 157, 158). இப்பண்டங்களின் வழி மூலம் சீனாவுக்கு உரியதாக எந்த அளவு கூறப்பட்டதோ, அந்த அளவு சேரர்க்கும் உரியதாகக் கூறப்பட்டது. ஆகவே, இப்பண்டங்கள் "சேர்ஸ்" எனப் பெயரிடப்பட்டன. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மற்றொரு பண்டம், எருமைப் பாலிலிருந்து எடுக்கப்படும் நெய், “கி. பி. 1672-81 காலத்தவராய 'ப்ரையர்' (Fryer) என்பார், தெக்கணத்தில் இருந்த, 400 ஆண்டுப் பழமையும், மருந்தாகிப் பயன்படும் நன்கு மதிக்கற்பாடும், மிக உயர்ந்த விலையும் வாய்ந்த நெய்நிறைந்த தொட்டிகள் குறித்துக் கூறுகிறார் (Scoffs Periplws, 41, 177). இந்தியாவிலிருந்து, உரோமுக்கு அனுப்பப்பட்ட விலங்கு தரு பொருட்களுள் மிக முக்கியமான பொருள். தந்தம், "உரோமப் பேரரசு உருப்பெற்ற அந்நாள் தொட்டு, இந்தியத் தந்தம், பரவலாகப் பேசப்பட்டது. உரோமானியர் நடத்திய தந்த வாணிகம் மிகப் பெரிய அளவிலானது என்பது, அது கொண்டு பண்ணப்பட்ட, பேரெண்ணிக்கையிலான பொருள்களாலும், பழைய எழுத்தாளர்களின் நூல்களில், அது பற்றிய குறிப்புகள், பெரு வழக்காகிவிட்ட நிலையாலும், தந்தத்திலான, இன்றும் அழியாமலிருக்கும் பொருள்களின், எண்ணிக்கையை முடிவுகாண மாட்டாமையாலும் தெளிவாகும். இலக்கியத்தில் மட்டும், அது உருவச் சிலைகள், நாற்காலிகள், படுக்கைகள், மன்னர்கைச் செங்கோல்கள், வாளின் கைப்பிடிகள், வாளுறைகள், தேர்கள், வண்டிகள், பட்டயத்தகடுகள், புத்தக மேலட்டைகள், மேசைக்கால்கள், கதவுகள், புல்லாங்குழல்கள், யாழ்கள், சீப்புகள், அணி. ஊக்குகள், ஊசிகள், துடைப்பான்கள், பெட்டிகள், பறவைக் கூண்டுகள், வீட்டின் அடித்தளங்கள் ஆகியவற்றிற்குப் பயன்பட்டதாகக் காண்கிறோம். வழக்கிறந்துபோன, ஆனால், ஆவணங்களில், பெயரளவில் இடம் பெற்றிருப்பனவற்றின், ஒன்று பலவான மாதிரிப்படிவங்களும், ஏற்கெனவே உள்ள,