பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 . தமிழர் வரலாறு அந்த விகிதாசாரம் 1க்கு 9.3 ஆயிற்று. ஒரு பொன் நாணயம், (Awrews) 25 வெள்ளி நாணய (Denari) மதிப்புடையதாயிற்று. கிளாடியஸ் காலத்தில் இந்தியாவுக்கான கடல் வழி திறக்கப்பட்டது. ஊதாரித்தனம், பாழடித்தல்களின் ஒவ் வொரு நிலையாலும் புகழ்பெற்ற, வெள்ளி நாணயத்தில், நூற்றுக்கு 20 பங்கு செப்பு சேர்க்கப்பட்டு, அதன் மதிப்பு, ஒரு பொன் நாணயத்துக்கு 84 வெள்ளி நாணயம் என்ற நிலையிலிருந்து, 1க்கு 94 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட, நீரோவின் ஆட்சிக்காலம் அதன் பின் வந்தது. செப்புக் கலவை, "ட்ராஜன் (Trajaun) ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கு 30 பங்கும், செப்டிமஸ் (Septimus) செவெரஸ்" (Severus) ஆட்சிக் காலத்தில், 100க்கு 50 பங்காக உயர்ந்து விட்டது. இறுதியாக, கி. பி. 218-இல் 'எல் கபாலுஸ்' (Elagabalus) ஆட்சியில், அது முழுவதும் செப்பாகவே ஆக்கப் பட்டு அதன் பயனாய் ஏற்க மறுக்கும் நிலையினை அடைந்து அழிவு நிலைக்கு ஆளாகிவிட்டது. பொன் நாணயங்களும் கலப்படத்திற்கு உள்ளாயின. வாங்கிய பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களாக, இந்தியாவுக்குக் கொடுக்க வேண்டியப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்ட்டுவிடவே, உள்நாட்டில், அது வழக்கற்றுப் போகலாயிற்று. அகஸ்டஸ் ஆட்சியில், உரோமப் பொன் நாணயம், ஒரு பவுண்டு பொன்னின் 40 இல் ஒரு பங்கு எடையுடையதாக இருந்தது 'டையோக்லெதியன் (Diocietian) காலத்தில் 60இல் ஒரு பங்கு எடைக்குக் குறைந்துவிட்டது. நாணயம், அதன் நிறையள விலேயே மதிக்கப்பட்ட, 'கான்ஸ்டன்டைன் (Constantine) காலத்தில் அது 72இல் ஒரு பங்கு என மேலும் குறைந்து விட்டது. இழப்பை ஈடு செய்வதற்குப் புதிய பொருட்கள் உற்பத்தி செய்யப்படாத, நாட்டு முதலீட்டின் இச்சீரான வீழ்ச்சிதான், மூன்றாவது நூற்றாண்டில், ரோம் நகரை விடுத்து, தலைநகரை, நிகோமீடியா (Nicomedia) வுக்கும், சிறிது நாளைக்கெல்லாம் பைஸான்டிம்" (Byzantium) நகருக்கும் மாற்றுவதற்கு வழிவகுத்துவிட்டது. (Scors Peiplus Page: 219 - 220).