பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 - தமிழர் வரலாறு நாட்டில் பரப்ப, இன்னமும் தீவிரமாக முயலவில்லை எனத் தெரிகிறது. - கொமரிக்குப் பிறகு, பெரிபுளுஸ் "முத்து மீன்கள் வாழும், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளைக் கொண்டு முத்து எடுக்கப்படும், பாண்டிய அரசுக்குச் சொந்தமான கொல்ச்சி (Colchi) நகரைக் (கொற்கை நகரைக்) குறிப்பிடுகிறார் (Periplus Page , 59). கொற்கைக்கு அப்பால் உளது கடற்கரை நாடு (Coast Country) என்கிறார். அவ்வாறு கூறுவதன் மூலம், பெரிபுளுஸ், சோழ நாட்டுக் கடற்கரையைக் குறிப்பிடுகிறார். "ஆங்குள்ள கடற்கரைகளில் திரட்டப்பட்ட முத்துகளை, வேறெங்குமில்லாமல் தன்னிடத்தில் குவித்து வைத்திருக்கும் அர்கரிடிக் (Algaritic) என அழைக்கப்படும் மென்துணியை ஏற்றுமதி செய்யும், சமஸ்கிருத "உரகபுரா" என்பதன் திரிபான "அர்கரு" (Argaru) (உறையூர்) அழைக்கப்படும் உள்நாடு ஒன்றும் உளது" (Periplus Page:59). உறையூருக்கு வடக்கில், இன்று போலவே, அன்றும் பருத்தி ஆடை உற்பத்திக்குப் புகழ்வாய்ந்த, சேலம், கடப்பை மாவட்டங்கள் உள்ளன". பெரிபுளுஸ் ஆசிரியர், கொற்க்ைகு அப்பால் பயணம் செய்யவில்லை. கிழக்குக் கடற்கரைபற்றி, அவர் கூறுவன எல்லாம், காதுவழிச் செய்திகளே; தாலமி கூற்றுப்போல, அத்துணை ஆய்வுக்கு உட்படாத அவை, ஏற்புடையன அல்ல; subgir, (Comera) Gli Irrglært, (Podwka) Gerrrl il lort (Sopatma) இவை, அவர் குறிப்பிடும் சோணாட்டுத் துறைமுகங்கள்; கோடிக்கரை, நெகபடாம், மற்றும் காவிரி கடலொடு கலக்குமிடம் ஆகியன, அக்காலத்தில் சோணாட்டின் சிறந்த துறைமுகங்களாக இருந்தன. கிழக்குக் கடற்கரையின் தென்பகுதித் துறைமுகங்களிலிருந்து "சொலந்தியா" (Colandia) எனப்படும் பெரிய கப்பல்கள், கங்கை, மற்றும் 'செர்ய்செ (cherse) அக்காலை, சுவண்ண பூமி என அழைக்கப்படும் பர்மா ஆகிய இடங்களுக்குச் சென்றதாகப் பெரி புளுஸ் கூறுகிறார். "தமிரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு பொருளும், எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொருள்களின் பெரும்பகுதியும்