பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H54 - தமிழர் வரலாறு செய்யப்பட்டிருக்கும் என்பதும், முன்னதைப் போலவே பொருளில் கூற்றாம். தாலமி காலத்துக்கு ஏறத்தாழச், சிறிது முந்திய காலத்தில், ரோம் நகரில் இருந்த சுவர் வண்ண ஒவியங்களிலிருந்து படி எடுத்த நிலப்படங்களாகிய "பெயுதிங்கோரியன் (Pewthingorian) கல்வெட்டுக்கள், மேற்குக் கடற்கரையில், முசிறிக்கு அருகில், அகஸ்டஸ் கோயில் ஒன்றை இடம் சுட்டுகிறது. தம்முடைய நில இயல் நூலை கி. பி. 150 இல் தொகுத்த தாலமி, தாம் அறிந்த செய்திகளில் ஒரு பகுதியை, இந்தியாவில் நெடுநாட்கள் வாழ்ந்திருந்த வரிடமிருந்து பெற்றதாகக் கூறியுள்ளார், இவைபோலும் உண்மைகள், உரோம வணிகர்களின் குடியிருப்புகள், தமிழ்நாட்டின் பல்வேறு வணிக மையங்களில் இருந்தன என்பதை உறுதி செய்கின்றன. தென்னிந்தியாவில் உரோமர்கள் : உரோம வணிகர்கள், உரோம வீரர்கள், உரோமக் கைவினைஞர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்திருந்தனர் என்பதை உறுதி செய்யவல்ல ஏராளமான அகச்சான்றுகள் அக்காலத்திய தமிழ் இலக்கியங்களில் உள்ளன. உரோம வணிகர்கள், மது, பொற்காசு ஆகியவற்றைத் தென்னிந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். கிரேக்கர், அந்நாட்களில், உலக நாடுகளுக்கிடையில் கொண்டிருந்த உறவு நிலையில், புறக்கணிக்குமளவு தாழ்ந்து விட்டனரா தலின், தொடக்கத்தில், கிரேக்கரைக் குறிக்க வழங்கிய, யவனர் என்ற சொல், இக்காலத்தில் உரோமரையும் குறிக்கும் வகையில் விரிவு பெற்றுவிட்டது. ஒரு பாட்டு, யவனர், நல்ல குப்பிகளில் கொண்டுவந்த குளிர்ந்த, இனிய மணம் உடைய மதுவை, ஒள்ளிய வளை அணிந்த மகளிர், பொன்னால் செய்த அழகிய கலங்களில் ஏந்தி வந்து நாள்தோறும் ஊட்டிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. "யவனர், நன்கலம் தந்த தண் கமழ் தேறல், பொன்செய் புனைகலத்து ஏந்தி, நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப" புறநாநூறு :56, 18:20