பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு... வாணிகம் 155 இன்னொரு பாட்டு, ೧LTir நாணயங்கள் இறக்குமதியைக் குறிப்பிடுகிறது. அது, "சேர அரசர்க்குரிய, கள்ளி ஆகிய, அழகிய பேரியாற்றின் வெண்ணுரைகள் சிதறி அகலுமாறு, யவனர்கள் கொண்டு வந்த, தொழிலால் மாட்சிமைப்பட்ட நல்ல கப்பல்கள், பொற்காசுகளோடு வந்து, மிளகுப் பொதிகளோடு மீண்டு செல்லும், வாணிகவளம் மிக்க முசிறித்துறை ஆராவாரத்தை"க் குறிப்பிடுகிறது. "சேரலர், சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி ஆர்ப்பு" அகநானூறு 149 : 7-11 ஒரு புறநானூற்றுப்பாட்டு, "மனையில் குவிந்து கிடக்கும் மிளகுப் பொதிகளால் ஆரவாரம் மிக்க கடற்கரை கலக்கம் உறும்; கப்பல்கள் கொண்டு வந்த பொற்காசுகள், உப்பங்கழிகளில் உள்ள தோணிகளால் கரை சேரும், முழவொலி போல் கடல் முழங்கும் முசிறி" என, இவ்வாணிக வளத்தை யவனர் பெயர் குறிக்காமல் குறிப்பிடுகிறது. "மனைக்குவைஇய கறி முடையால் - கலிச் சுமைய கரை கலக்குறுந்து; கலம் தந்த பொற்பரிசம் . கழித் தோணியால் கரைசேர்க்குந்து: முழங்குகடல் முசுறி" - புறநானூறு 343:310, உரோம வீரர்கள், தமிழ்நாட்டில் நிலைபெற்ற குடியினராய்த் தமிழரசர்களின் மெய்க்காவலர்களாய்ப்பணி புரிந்து வந்தனர். அவர்கள் பின்வருமாறு விளக்கப் பட்டுள்ளனர். "இயல்பாகவே வலிசு.டி, முறுக்கேறிய உடலும், அதற்கேற்ப படைக்கஞ்சாப் பேராண்மையும் வாய்ந்த யவனர், குதிரைகளை விரைந்தோட்டவல்ல, சவுக்கை, 6. 41