பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு, வாணிகம் | 63 (Arwvarnot) என்ற நாடுகளை முறையே ஆளும், "கெரபோத்ரோஸ்" (Kerabothros) (அசோன் கல்வெட்டில் வரும் கேரள புத்ரர்), பாண்டியன் (Pandion)"சொர்னகோஸ்", (Sonagos), "பளபர்னகோஸ்" (Basanagos) என்ற நான்கு அரச இனங்களைத் தாலமி குறிப்பிடுகிறார். கடைசி இரு பெயர்களின் ஈற்றில் வரும் "னகோஸ்" (Naguos) என்பதை "ராஜா” என்பதன் பிழைவடிவாகக் கொண்டாலல்லது அதன் பொருளை உணர்ந்து கொள்வது அறவே இயலாது. கடைசியில் வரும் அரச இனத்தைக் குறிக்கும், "பலர்னகோஸ்" என்ற பெயர், ஒரு தமிழ் அரச இனத்தின் பெயராவது அறவே பொருந்தாது. தாலமியின் காலத்தில், "அருவார்நோயி" நாட்டைப், பல்லவர் ஆளத் தொடங்கி யிருக்கக் கூடும். அங்ங்ணமாயின், "பஸர்னகோஸ்" என்பது, "பல்லவராஜா" என்ற சொல்லின் திரிபு வடிவாதல் கூடும். இவ்வரச இனங்களின் தலைநகர்கள், தாலமியால் கூடுமானவரை சரியாகவே கொடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு நகரங்களான அவை வருமாறு : கரூரைக் குறிக்கும் "கரெளரா", (Karoura) மதுரையைக் குறிக்கும் "மொதெளரா" (Modowra) உறையூர், அல்லது உறந்தை அல்லது சமஸ் கிருதத்தில் உறக.புராவைக் குறிக்கும் "ஒர்தொரா' (Orthowa) காஞ்சீபுரம், அல்லது காஞ்சீபுரத்திற்கு அருகில் உள்ள மாநிலங்கையைக் குறிக்கும் "மலங்கா" (Malanga) கடலைக் சார்ந்தனவும் உள்நாடுகளில் இருப்பனவுமாகிய எண்ணற்ற ஊர்ப் பெயர்களையும் தாலமி குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் சில வருமாறு : "திண்டிஸ்" (Tyndis) தொண்டி ஆகும். "மெளவபிரிஸ்" (Mowziris) முசிறி ஆகும். மரகதமும், வைடுரியமும் கிடைக்கும் "பெளனட" (lownta)புன்னாடாகும். சேர நாடாம் "டிமிரிக்கே" வில் இருக்கும் "கரெளரா" (Karoura) கரூர் ஆகும். ஐயோயி நாட்டில் இருக்கும் கொட்டியரா, கொமரியா (Kotara Komalia) என்பன முறையே, கோட்டாரும், குமரியும் ஆம், "கோரி" (Kory) தனுஷ்கோடி, இராமேஸ்வரம் இரண்டையும் குறிக்கும். மதுரை மட்டுமல்லாமல், பாண்டி நாட்டில் இருக்கும் "பெரிங்கரை" (Beringkarai) பெருங்கரையைக் குறிக்கும். "நிகம" (Nikama)