பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் | 69 மாவட்டம், தனக்கென ஒரு தனிப் பெயரைப் பெற்றிருக்கவில்லை; மாறாக, இன்று, தென்னார்க்காடு மாவட்டம் என அழைக்கப்படும் "அருவா" நாட்டிற்கு வடக்கே உள்ள நாடு எனும் பொருளில், "அருவாவடதலை" என்று மட்டுமே அழைக்கப்பட்டது. பிற்காலத்தில், அதாவது, பல்லவ அரச இனம், ஆங்கு, இறுதியாகத், தங்களை நிலைபெறச் செய்து கொண்டு, அம்மாவட்டம், தமிழ் நாகரிகத்தின் நடுநாயகமாகிவிட்டதற்கு நெடுங்காலத்திற்குப் பின்னரே, அது, "தொண்டி" என்ற கொடியால் பெயர் பெற்ற அரசர்கள், அல்லது இனத்தவர்களால் ஆளப்பட்ட மாவட்டம் எனும் பொருளில் தொண்டைமண்டலம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப் பட்டது, அதன் பின்னர்த் தென்னார்க்காடு மாவட்டம் "நடுநாடு" ஆகிவிட்டது. ஆகப் பண்டை நாட்களில், காஞ்சிபுர மாவட்டம், உண்மையான தமிழ் நாட்டிற்கு வெளியில், அருவா என்ற தமிழ் மாவட்டத்தின் வடக்கில் இருந்ததாகவே தமிழர்களால் கருதப்பட்டது என்பதை நாம் அறிகிறோம். . . - ஆந்திரர் : இந்நிலப் பகுதிக்கு அப்பால் அமைந்திருந்தது, ஆரிய நாகரிகம், விந்தியத்தை ஊடுருவித் தஷிணபாதத்தில் பரவிய போது, அதை முதன்முதலில் ஏற்றுக்கொண்டவர்களாகிய, விந்தியத்திற்கு அப்பாலான தஸ்யூக்களாம் ஆந்திரர் ஆட்சி புரிந்து வந்த மேட்டு நிலம், ஆந்திரரிடையே, பெளதாயனர், ஆபஸ்தம்பர் என்ற இரண்டு பிற்கால முனிவர்கள் தோன்றினர். ஆகவே, அவ்வாந்திரர், கி.மு. முதலாம். ஆயிரத் தாண்டின் தொடக்கத்தில், ஆரிய மயமாக்கப்பட்டனர். விந்தியத்திற்குத் தெற்கில், மிகப்பரந்த, ஆரிய மயமாக்கப்பட்ட ஒரு பேரரசை, ஆந்திரர்கள், நனிமிகப் பழங்காலத்தில் நிறுவி யிருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், அவர் களிடையே, அறங்கூறும் ஆன்றோர்களின் பிறப்பை விளக்குவது மிகவும் அரிதாம்; காரணம், அறம் கூறும் ஆன்றோர்கள், அரசர்களின் அரவணைப்பு இன்றித்