பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் . 173 முற்பட்ட காலத்திலிருந்தே, இந்தியா முழுமைக்கும் நாகரிகத்தின் ஒளிகாட்டிகளும், இந்தியச் சிந்தனையாளர் களின் தலைவர்களுமாகிய, "நாகார்ஜுனன்" "தின்னாகர்”, : "புத்ததத்தர்", "தர்மபாலர்", "எலங்கரர்", "ராமானுஜர்", "ஆனந்ததீர்த்தர்", "மாதவர்", "லாயனர்" மற்றும் தென் னிந்திய அறிஞர் பெருமக்களில் தலையாய நிலை பெற்றவர் என்பதும், மறுக்கப்படக் கூடியதன்று. மற்று எல்லா வற்றிற்கும் மேலாக, இந்த உண்மை, இந்நாடு, பொது நிகழ்ச்சிகளின் நிர்வாகம் குறித்து, எப்பொழுதும் ஐம்பத்தாறு நாடுகளாகப் பிரிவுண்டிருந்தாலும், இந்தியாவின் ஒருமைப்பாடு, அதன் நாகரிகத்தின் இடைவிடாத் தொடர்பு ஆகியவைகளை உறுதி செய்கிறது. காஞ்சீபுரத்தின் பல பெயர்களுள் ஒன்று, "சத்ய வரத கேத்ரம்" என்பது. பாகவத புராணம், சத்யவரதன் (திராவிட அதாவது காஞ்சியின் காவலன்) விவஸ்வானின் மகன், மனு ஆயினன் எனக் கூறுகிறது. (பாகவதம் : 9 - 2, 3 பர்கிதர் பதிப்பு). இந்தில் வரலாற்றுத் தொடரில், ஆரியராக்கப்பட்ட அரசர்களின் குலமரபைப் புராணக் கடவுள்கள் அல்லது வீரர்களின் குலமரபில் காணும், குடிவழிப்பட்டியலை விடாது உருவாக்கி வரும் பிராமணாக்களால் சூரிய குலத்தில் இணைக்கப்பட்டான் சத்யவரதன் என்பதே இதன் பொருள் ஆகும். பல்லவர் காலத்துக்கு முன்பு, காஞ்சியை ஆண்ட அரசர்கள், பெரும்பாலும், சத்யவரதன் வழிவந்தவராய சத்யபுத்திரர் எனப் பேசப்பட்டனர் என்பதைப் போகிற போக்கில் குறிப்பிடல் கூடும். அசோகனின், "சத்தியபுத்தெர" என்பார், பெரும்பாலும், அவன் காலத்தில் காஞ்சி அரசர்கள் so aff (As suggested by S. V. Venkatesvara in the Indian Antiquary for 1919). . . . • § . . .” - சத்யவரதர்களின் வழிவந்தவர்கள், ஆந்திரர்களின் ஆட்சிக்கு அடங்கிய குறுநிலத் தலைவர்களா, அல்லவா என்பதை உறுதிசெய்வல்ல வழிமுறை எதுவும் இல்லை. ஆனால், ஆந்திரநாடு, ஆரியமயமாக்கப்பட்ட பின்னர்க் காஞ்சீபுரம், ஆரிய நாகரிகத்தின் தென்கோடிக் காவல்