பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 179 பேசப்பட்டு வந்துளது என்பதைக் காட்டுகிறது. சிவகந்த வம்மனின் சிலாஸாஸன மொழி மீது, ஆதிக்கம் செலுத்தும் தமிழ்ச் செல்வாக்குகள் வேறு சிலவும் உளவேனும், அவை ஈண்டு ஆராயப்பட மாட்டா. - இந்தியாவில் பதிப்பித்து வெளியிப்பட்ட முதல், சமஸ்கிருத மொழி கல் எழுத்துப் பொறிப்பு, கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் மையப்பகுதியைச் சேர்ந்த மால்வ நாட்டு ருத்திரதாமுடையதாகும். இக்காலம் தொடங்கிப் பிராகிருத மொழி கல் எழுத்துப் பொறிப்புகள், சமஸ்கிருத மொழி எழுத்துப் பொறிப்புக்களால், விரைவாக இடமாற்றிக் கொள்ளப்பட்டன. இவ்வுண்மை சிவகந்தவம்மன், பெரும் பாலும், கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்து முன்னே, இல்லையெனில், இன்னமும் சற்று முன்னே ஆண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. திருவாளர் பவுல்கெஸ் (Foulkes) அவர்கள், பல்லவர்களின் இப்பழைய சாஸனங்களெல்லாம், ஆண்டின் முப்பருவங்களில் ஒரு பருவத்து, ஞாயிறு முதலாம் இருவாரகாலத்துப் பதின்மைக் கூறுகளால் நாட்களைக் கணக்கிடுவதன் மூலம், தெக்கணத்தில் கண்டெடுக்கப்பட்ட, கி. பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆந்திர எழுத்துப் பொறிப்புக்களில் பரவலாக இடம் பெற்றிருக்கும் முறையில் நாட்கள் கணக்கிடப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார். இது பல்லவ அரசு, காஞ்சீபுர மாவட்டத்தில் இரண்டாம் நூற்றாண்டில் அல்லது அதற்கு முன்பு நிலவியிருந்தது என்ற கருத்திற்குக் கொண்டு செல்கிறது. இந்தத் தற்காலிகப் புனைவுக் கற்பனை, மகாவம்ஸ்த்தில் (அதிகாரம் : 29) காணப்படும் வட்டகாமணி, (வழிவழியான மரபுவழிக் கணக்கீட்டின்படி கி.மு. 157-இல் அனுராதபுரத்தில் ஒரு கம்பத்தை நாட்டினான்; அது குறித்து எடுத்த புனித விழாவின்போது, பேரறிஞர் மகாதேவர், "பல்லவ பொக்கப்" புத்தப் பள்ளியிலிருந்து நானூற்று அறுபது ஆயிரம் பிக்குகளோடு வருகை தந்தார்" என்ற அறிவிப்பால் உறுதி செய்யப்படுகிறது. திருவாளர் பவுல்கெஸ் அவர்கள் பல்லவ பொக்காவைக் காஞ்சீபுர மாவட்டமாக அடையாளம் கண்டு,