பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 181 காலத்துப் பல்லவர், தமிழரல்லர். ஆகவே, அதுபோலும் விளக்கம் இங்குத் தேவையில்லை. காஞ்சி நகரமோ, அந்நகரைச் சேர்ந்த பழைய பல்லவ ஆட்சியாளரோ, இப்போது கிடைக்கும் பழைய தமிழ்ப் பாக்களில் குறிப்பிடப்படவே இல்லை. இதற்குக் காரணம், அந்நகரம், தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருந்தாலும், பண்டைக் காலத்தில் அது, சமஸ்கிருத நாகரிகத்தின் தாயகமாகவே இருந்தது; தமிழ் நாகரிகத்தின் தாயகமாக இருக்கவில்லை ; தமிழ் அரசர்களால் ஆளப்படவில்லை; ஆரிய அல்லது ஆரியராக ஆக்கப்பட்ட ராஜாக்களால் ஆளப்பட்டது. கி.பி. நான்காம் நூற்றாண்டளவில், (அடுத்த அதிகாரத்தில் காண இருப்பது போல்) அது, தற்காலிகமாகத் தமிழர் கைக்குச் சென்றது. இது, தமிழர் தனி நாகரிகம், ஆரிய நாகரிகத்திற்குக், கீழ்ப்படிந்து போனது, காஞ்சீபுர மாவட்டத்தில் தமிழிலக்கிய நாகரிகம் பரவியது ஆகிய இருவிளைவுகளை உடையாதாகிவிட்டது.