பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I காஞ்சி மாநகர், தமிழ்நாட்டின் எல்லைக்குள் இடம் பெற்றிருந்தாலும், பண்டைக் காலத்தில், அது, தமிழர் நாகரிகத்தைக் கொண்டிருக்கவில்லை; மாறாகச் சமஸ்கிருத நாகரிகத்தின் நடுநாயகமாகவே இருந்தது; அது, தமிழ் அரசர்களாலும் ஆளப்படவில்லை; மாறாக ஆரிய ராஜாக்களாலேயே ஆளப்பட்டது? இக்கூற்று உண்மையா? (மறப்பு) திருவாளர், பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், தம் முடைய "தமிழர் வரலாறு" நூலில், இவ்வாறு கூறியுள்ளார் (பக்கம் : 333-34). தம்முடைய இம்முடிவிற்கு அவர் காட்டும் தலையாய காரணம், பழந்தமிழ்ப் பாக்களில், காஞ்சி என்ற அதன் பெயரோ, அது ஆண்ட பழைய பல்லவ அரசர்களோ குறிப்பிடப்படவில்லை என்பது ஒன்றே. (பக்கம் : 333) தமிழ்நாட்டின் எல்லைகளாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய மாங்குடி மருதனாரும், அச்செழியனால் சிறை பிடிக்கப்பட்டுப் பின்னர்ச் சிறைவீடு பெற்று அரியனை அமர்ந்த யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய குறுங்கோழியூர் கிழாரும், "தென்குமரிவடபெருங்கல், குண, குட கடலா எல்லை" (மதுரைக்காஞ்சி : 70 - 71 ; புறம் : 17) எனத் தமிழகத்தின் வடவெல்லை, வடபேரிமயமாக இருந்திருக்கக் கூடுமோ என ஐயுறத்தக்க வகையில் கூறி யுள்ளனர். என்றாலும், அவர்களுக்கு அது கருத்தன்று. அவர்கள் "வடபெருங்கல்" என்ற தொடரால் குறிப்பிடும் மலை, வேங்கடமலையே.