பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 183 இவர்கள் காலத்துப் புலவர்கள் பலரும், இமயமலையின் பல்வேறு சிறப்புகளையும், அம்மலைமுடியில், தமிழரசர்கள் தங்கள் கொடிகளை நாட்டியதையும், அவ்வரசர்களுள் சிலர், அவ்விமயம் குமரிகட்கு இடைப்பட்ட நாட்டில் அரசோச் சியிருந்த அத்தனை அரசர்களையும் வெற்றி கொண்டதையும் அறிந்திருந்தனர். ஆயினும், அவர்களுள் ஒருவரேனும், தமிழகத்தின் வட எல்லை இமயம் என ஒரிடத்தும் கூறினாரல்லர். இமயத்தை இத்துணைத் தெளிவாக உணர்ந்திருந்த புலவர்கள் வாழ்ந்த காலத்தே வாழ்ந்து, அப்புலவர்கள் பாராட்டிய அரசர்களையே பாராட்டிய, இவ்விருவரும்கூட, அப்புலவர்களைப் போலவே, இமயத்தைத் தெளிவாகத் தெரிந்தே வைத்திருப்பர். இந்நிலையில், தமிழகத்தின் வட எல்லை, இமயமாக இருந்திருப்பின், தமிழகத்தின் வடதென் எல்லைகளைக் குறிப்பிடும்போது, "தென் குமரி வடஇமயம்" бт6:7, இமயத்தின் பெயர் சுட்டியே கூறியிருப்பர். தென் எல்லையைத், "தென்குமரி" எனப் பெயர் சுட்டிக் கூறிய அவர்கள், வடவெல்லையைக் குறிப்பிடும்போது மட்டும், இமயத்தின் பெயர் கூட்டி, "வட இமயம்" எனக் கூறாமல், "வடபெருங்கல்" என வறிதே கூறியிருக்க மாட்டார்கள். ஆகவே, வடவெல்லை இமயம் என்பது, அவர் கருத்தன்று. அவர்கள் கூறாத ஒன்றைக் கூறியதாகக் கொள்ளவைத்த குற்றம், "வடபெருங்கல்" என்பதற்கு, "வட இமயம்" எனப் பொருள் கூறிய உரையாசிரியர்களையே சாரும். தொல்காப்பியப் பாயிரம் பாடிய பனம்பாரனார், "வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" எனத் தமிழகத்தின் வடவெல்லையாக வேங்கட மலையையே கொண்டுள்ளார். தென் குமரிதொட்டு, வேங்கடம் வரை, தமிழே வழங்கி வந்தது. தமிழ் அல்லாத வேற்றுமொழி, வேங்கடத்திற்கு அப்பால்தான் இடம் பெற்றிருந்தது, இதைப் "பனிபடு 2,33 . áf. சோலை, வேங்கடத்து உம்பர் மொழி பெயர் தேஎம்";"தமிழ் கெழு மூவர்காக்கும் மொழி பெயர் தேஎம்;" (அகம் : 21, 31)