பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 199 பாரதக் கதைகள், பழம்புராணங்களின் கூற்றை மறுத்து, "வடஆரியர்களால் தஸ்யூக்கள் என அழைக்கப்படும் தென்னாட்டுத் திராவிடப் பழங்குடியினர், நாடு கடத்தப் பட்டும், வாழ்விடம் தேடியும் அவ்வப்போது வந்து குடியேறிய, ஆரிய வந்தேறிகளால், நாகரிகம் பெறக் காத்திருந்த நாகரிகம் கல்லாக் காட்டுமிராண்டிப் பழங்குடியினர் அல்லர்" (பக்கம் : 32) என, அவர் கூறி யிருப்பதும் காண்க. - - கி.மு. நான்காம் நூற்றாண்டில் வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம், எப்போதும் இருந்திராத அளவு மிகப்பெரிய அளவினை அடைந்திருந்தது என்று கூறிவிட்டுத் "தrண பாரதத்தில் பெரிய கனிவளச் சுரங்கங்களையும், வழிநெடுகிலும் மக்கள் பெருக்கத்தையும் கடந்து செல்லும் பெருவழிகள், பாடலியை அடையும் ஏனைய பெருவழிகளிலும் நனிமிகச் சிறந்ததாம்" எனக் கெளடல்யர் கூறியதை மேற்கோள் காட்டிப் புகைவண்டித் தொடர்களும், உந்துவண்டிகளும் அழிந்துவிடாமல் விட்டு வைத்திருக்கும் இடங்களில், இக்காலத்தும் நாம் காண்பது போல், கிரீச் எனும் ஒலி ஓயாது தொடர்ந்து எழக் குமரிமுதல் பாடலி வரையான, சீர்மிகு, சீர்கெட்ட நெடுஞ்சாலைகளில் செல்லும் மாடு பூட்டிய கட்டை வண்டிகளாம் வணிகச் சாத்துக்கள் மூலம், பெரிய வணிகப்போக்குவரத்து நடைபெற்று வந்தது என்றும் கூறியுள்ளார் திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் (தமிழர் வரலாறு : பக்கம் ; 141 - 142 காண்க). - ‘. . . . . - கி.மு. நான்காம் நூற்றாண்டின் நிலை, கடைச்சங்க காலத்தில் பெருகியிருக்குமே அல்லது, குறைந்திருக்காது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை ஒருமுறை படிப்பவர்க்கும், பழந்தமிழகத்தில் பேரூர்களையும், சிற்றுார் களையும் இணைக்கும் பெருஞ்சாலைகள். தமிழ்நாடெங்கும் இடம் பெற்றிருந்தன என்பதும், அப்பெருஞ்சாலைகள் இருமருங்கிலும், நெடுகிலும், சிற்றுார்களும் பேரூர்களும் இடம் பெற்றிருந்தன என்பதும் தெற்றெனப் புலனாம்.