பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் 211 தம்முடைய ஒப்புதலைத் திருவாளர் நீலகண்ட சாஸ்தியார் அவர்கள், தந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தில், பண்டை வரலாற்று மற்றும் தொல்பொருள் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்த திருவாளர். தே. வை. மகாலிங்கம் அவர்கள் 1963-இல் ஆற்றிய ஆறு விரிவுரைகளின் தொகுப்பாக, 1968இல் வெளியிடப்பட்ட, "தென்னிந்திய பண்டை வரலாற்றில் GrS5F gb" (Kancheepuramin EarlySouth Indian History) srcorp தம் நூலில், "காஞ்சீபுரம், அதன் தொடக்கம்" (Kancheepuram its Beginning) என்ற முதல் அதிகாரத்தில், பக்கம் 9-இல் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில், காஞ்சியின் நிலைகுறித்துத் திரு. பான்கொள என்ற சீன எழுத்தாளன் கூறிய இதே நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளார். - 1939 ஆம் ஆண்டில், அதாவது திருவாளர். பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள், தமிழர் வரலாறு' என்ற தம்முடைய நூலை வெளியிட்ட பத்து ஆண்டுகள் கழித்து, வெளியிடப் பட்ட திருவாளர், நீலகண்ட சாஸ்திரியார் அவர்களின், "தென்னிந்தியா பற்றிய வெளிநாட்டவர் குறிப்புகள்" என்ற நூலையோ, திருவாளர். தே. வை. மகாலிங்கம் அவர்களின் நூலையோ திருவாளர் அய்யங்கார் அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆகவேதான் 'காஞ்சி' என்பது, தமிழ்ச் சொல் அன்று, "காஞ்சீபுரக" என்ற சமஸ்கிருதச் சொல்லின் சுருங்கிய வடிவம் : அதன் தமிழாக்கமே கச்சி என்றும்,காஞ்சி மண்டலம் தமிழரசர்களால் ஆளப்படவில்லை; மாறாக, சமஸ்கிருத ராஜாக்களால் ஆளப்பட்டிருந்தது என்ற தவறான முடிவிற்குத் திருவாளர் அய்யங்கார் அவர்கள் தள்ளப் பட்டுள்ளார்.