பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத்தில்... வடஇந்தியத் தொடர்பு 15 பெரிய தஸ்யூ இனத்துக் கார்க்கோடக நாகரிடமிருந்து மாகிஸ்மதியைக் கைப்பற்றி, அதைத் தன்னுடைய படைக்கலத் தலைநகராக்கினான். அவனால் வெற்றி கொள்ளப்பட்ட ஏனையோரில், இலங்கை அரசன் இராவணனும் ஒருவன். அவனை மாகிஸ்மதியில் சிறைவைத்தான் என்றெல்லாம் அறிகிறோம். இந்த இராவணன், குறைந்தது ஐந்நூறு ஆண்டுகள் கழித்து வாழ்ந்த, இராமச்சந்திரனின் பகைவனாகிய இராவணன் அல்லன் என்பது உறுதி. ஆகவே, கார்ந்த வீரியனால் சிறை செய்யப்பட்ட இராவணன், அப்பெயரே கொண்ட இராமர் காலத்து இராவணனுக்குப் பல ஆண்டுகாலம் முன்னர் வாழ்ந்திருந்த ஒர் அரசனாக வேண்டும்; அல்லது, ராவணா என்பது, இறைவன் என்ற தமிழ்ச் சொல்லைச் சமஸ்கிருதப்படுத்தியதன் வடிவாம் அல்லது வேறு இல்லை. ஆகவே, அது ஒரு தமிழரசன் எனும் பொருள் உணர்த்தும், இறைவன் என்பதன் திரிபாம் என்று டாக்டர் ஸ்டென் கொனொவ் (Dr. Sten Konow) அவர்களின் யூகம் உண்மை யாதல் வேண்டும். இந்த அர்ச்சுனன், அல்லது அவனுடைய மகன்கள், பார்கவ முனிவர் சமதக்கினியின் ஆசிரமத்தைச் சூறையாடி, அவரையும் அவமானம் செய்து, அவருடைய பசுங்கன்றைக் கொண்டு சென்றனர். சமதக்கினியின் மகன், வெலற்கரிய பேராற்றல் வாய்ந்த இராமன், அவர்கள் மீது போர் தொடுத்து, அவர்களில் பலரையும், ஹய்ஹய குலத்தவரையும் அழித்தான். இராமனும், பார்கவர்களும் அவர்களோடு திருமண முறையால் உறவினர்களான, அயோத்தியா மற்றும் காண்ய குப்ஜ சிற்றரசர்களால் ஆதரிக்கப்பட்டனர். - தசரதராமனிலிருந்து வேறுபடுத்திக் காட்ட பிற்காலத்தில் பரசுராமன் என அழைக்கப்பட்ட சமதக்கினி ராமன், அர்ச்சுனனையும், பல ஹ்ய்ஹய குலத்தவரையும் கொன்றான். போர் வெற்றிகளுக்குப் பிறகு பரசுராமன் தவிக்காகக் கடல் ஒரு சிறு நிலப்பகுதியை ஒதுக்கிக் கொடுத்துவிட்டுச் சில