பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 213 கரிகால் வளவ! படையெடுத்துச்சென்று, பகைவர் ஆற்றிய போர்த் தொழிலை அழித்து, உன் பேராண்மை வெளிப்பட வெற்றி கொண்டவனே! ஆரவாரம் மிக்க புதுப்புது வருவாய்களைக் கொண்ட வெண்ணி எனும் இடத்தில் நடைபெற்ற போர்க்களத்தில், பெரும்புகழை இப்பேருலகில் நிலைபெறப் பண்ணிப் போரில் புறப் புண் பெற்றமைக்கு நாணி, வடக்கிருந்து உயிர் நீத்த உன்பகைவன், நின்னினும் நல்லன் அல்லனோ? "நளிஇரும் முந்நீர் நாவாய் ஒட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக ! களிஇயல் யானைக் கரிகால் வளவ ! சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய் ! நின்னினும் நல்லன் அன்றே ! கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே". புறநானூறு : 66. மிகச் சிறந்த பெரும்பாட்டாம் பொருநராற்றுப் படையிலும் (பொருநனுக்குப் பொருள் கிடைக்கும் இடமும் வழியும் கூறும் பாட்டு) - இப்போர் குறிப்பிடப்பட்டுளது. கரிகாலன் சமகாலத்தவரும், யாதோ ஒருவகையில் முடம்பட்ட உடலுறுப்புடையாரும், தலைமாலை அணிந்தவரும் ஆகிய முடத்தாமக் கண்ணியாரால், கரிகாலனின் கொலை வளம் பாராட்டப் பெறும் அப்பாட்டு, கரிகாலனை இவ்வாறு சிறப்பிக்கிறது : “கரியபெரிய பனைமரத்தின் குருத்து ஒலையாலாம் மாலையும், கரிய அடிமரத்தினையும் கிளைகளையும் கொண்ட, மரம் அறுக்கும் வாளின் வாய்போன்ற வேம்பின் அழகிய தளிர்களால் ஆன மாலையும், புகழால் உயர்ந்த பெரிய தலையில், மேலும் புகழ்பெருக முறையே அணிந்து கொண்ட சேரனும், பாண்டியனும், ஒரே போர்க்களத்தில் இறந்து போமாறு,