பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 . தமிழர் வரலாறு வெண்ணி என்ற ஊரின்கண்ணே நடைபெற்ற போரில் அவரோடு போரிட்ட, பகைவர் அஞ்சத்தக்க பேராண்மை யினையும், அதற்கேற்ற பெருமுயற்சியினையும், கண்ணுக்கு அழகூட்டும், ஆத்திமாலையினையும் உடைய கரிகால் வளவ!" "இரும் பனம் போந்தைத் தோடும், கரும்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஓங்கிரும் சென்னி மேம்பட மிலைந்த, இருபெரு வேந்தரும் ஒருகளத்து அவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள், கண்ணார் கண்ணிக் கரிகால் வளவ!" - பொருநராற்றுப்படை : 143 - 148. போரில் புறப்புண் பெற்றுவிடும் அரசன், போர்க்களத்தில், தன் கழுத்தைத் தன் கைவாளால் தானே அறுத்துக்கொண்டு விடுதல், பழம்பாக்களில், "வாளொடு வடக்கிருத்தல்" என்ற மரபுத் தொடரால் அழைக்கப்படும். "வடக்கிருத்தல்" என்ற தொடர், வடக்கு நோக்கி இருந்து உயிரைப் போக்கிக் கொள்வது, அல்லது வடக்கே உள்ள ஓர் இடத்தை அடைந்து, உண்ணாது இருந்து உயிர்விடுவது என்னும் பொருள் உடையதாகும். கரிகாலனின் பகைவர், ஒரு பாண்டிய வேந்தனும், மற்றொரு சேர வேந்தனுமாவர். இவர்களுள், பின்னவன், வெண்ணிப்போரில் வடக்கிருந்து உயிர்விட்ட செய்தி, அந்நிகழ்ச்சியை இறந்தகால நிகழ்ச்சியாகக் கூறுவதால், காலத்தால் பிற்பட்டதான ஒர் அகப்பாட்டிலும் கூறப்பட்டுளது. - "கரிகால் வளவனொடு வெண்ணிப்பறந்தலை பொருது புண் நாணிய சேரலாதன் அழிகள மருங்கின் வாள் வடக்கு இருந்தென." - அகம் : 55 : 10 - 12. சேரலாதன், சோழ அரசன் கரிகால் வளவனோடு, வெண்ணிப்போர்க் களத்தில் போரிட்டுத் தோற்றுப் போரில்