பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 219 அடையாதே திறந்து கிடக்கும் கோபுரவாயிலுள், அவ்வாயிற் காவலுக்குக் கூறாமலே புகுந்து. ஆரவாரப் பேரொலி எப்போதும் எழும், பரந்து அகன்ற இடம் உடையதான அரண்மனைக்குள் சென்றேன். வறுமையால் வாடியிருந்த என் மேனி, அவன் அரண்மனைக்கு வந்த விட்டோம் என்ற களிப்பு மிகுதியால் வாட்டம் தீர்ந்துவளம் பெற்றது. படம் விரித்து எழும் பாம்பின் படத்தில் காணப்படும், கவர்த்த கருங்கோடுபோல், கை விரல்களால் அடியுண்டு அடியுண்டு அமைந்துவிட்ட கரும் வடுவினைக் கொண்டு இருபக்கமும் அகன்று, இடைசிறுத்த உடுக்கை எழுப்பிய இரட்டை தாள இசைக்கு ஏற்ப, வாய்ப்பாட்டு ஒன்றினைப் பேரொளியுடைய தான வெள்ளியாகிய வான்மீன் தோன்றிவிட்ட மிக்க இருள் செறிந்த விடியற்போதில், பாடத் தொடங்கினேன். நான், அவ்வாறு தொடங்குவதற்கு முன்னரே, தன்னுடைய நெருங்கிய உறவினரைப் போலவே, என்னுடன் உறவு கொள்ள விரும்பினான். வரையாது கொடுத்து வான்புகழ் ஈட்டுவதற்கு வாய்ப்பாக, எப்போதும், நான், அவனிடமே சென்று இரந்து நிற்பதற்கு ஏற்ற, இனிய முகமன் உரைகளை மொழிந்தான். நான் எப்போதும், அவன் கண்ணில் பட்டுக் கொண்டிருக்குமாறு, மிக அணித்தான ஒர் இடத்தை எனக்கு அளித்தான். தன் கண்களால், என்னை அப்படியே விழுங்கி விடுவதுபோலும் பார்வையால், என் உடலெலும்புக ளெல்லாம், அன்பின் மிகுதியால், வெண்ணெய்போல இளகிவிடும் வண்ணம், அன்புத் தண்ணருளைச் சொரிந்தான். ஈரும் பேனும் கூடியிருந்து ஆட்சிசெய்யும், வேர்வையால் நனைந்து நனைந்து நைந்துபோன, வேற்றுநூல் இடையே நுழைவதற்கு ஏற்பப் பெரிய அளவில் கிழிந்து, தைக்கப்பெற்ற என் கந்தல் ஆடையை அறவே அகற்றிவிட்டு, இது இழையோடிய வழி எனக் கண்ணால் கண்டுகொள்ளாவாறு துண்ணிதாக நெய்யப் பெற்ற, பூத்தொழில்களால் புனையப்பட்ட, பாம்பின்தோல் போலும் மென்மையான ஆடைகளை அளித்தான். கார்மேகமோ எனக் கண்டவர் மருளுதற்கேற்பக் கறுத்து நீண்ட கூந்தலையுடையவரும், மகிழ்ச்சிதரும் மேனில மாடங்களில் உலாவருவாரும், 15