பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 225 யானைகள், தம் அரசனைப் பகைத்துக்கொண்ட பகை யரசர்களின் அரண்மதிலையும், வாயிற்கதவையும் தம் கோடுகளால் அழிக்கும்; அப்பகையரசர்களின் மணிமுடி அணிந்த தலைகளைக் கூரிய உகிர்களைக் கொண்ட முன் கால்களால் உதைக்கும். - - "பெற்றவை மகிழ்தல் செய்யான் : செற்றோர் கடியரண் தொலைத்த கதவு கொள் மருப்பின், முடியுடைக் கருத்தலைப் புரட்டும் முன்தாள் உகிருடையடிய, ஓங்கு எழில் யானை". - - பட்டினப்பாலை : 228 - 31. அவன் தன் பேரரசை விரிவுபடுத்த உறுதி பூண்டான். ஒளியர் குலத்தலைவர் பலரை மறங்கெடப்பண்ணிப் பணி கொண்டான். பழம்பெரும் பெருமை வாய்ந்த அருவா நாட்டவர், தாங்கள் செய்யும் தொழில் எதுவேயாயினும், அதை, இவன் ஏவல் கேட்டுச் செய்யுமளவு பணிந்து போயினர். அவ்வருவா நாட்டிற்கும் வடக்கில் உள்ளார் எல்லாம் வலியிழந்து வாடினர். குடநாட்டு அரசர் மன வெழுச்சி குன்றி அடங்கிக் கிடந்தனர். பாண்டியர் வலியிழந்து போயினர். பகையரசர்களின் எளிதில் பாழற்றுப் போகாத் திண்மை வாய்ந்த அரண்மதிலைக் கைப்பற்றும் உள்ளச் செருக்கும், வலிய கால்களும் கொண்ட யானைப் படையும், மறத்தால் சிறந்த வலிமையும் உடைமையால், புல்லிய முல்லை நிலத்துக் குறுநிலத் தலைவர்களின் கால்வழி முழுவதும் கெட்டொழியவும், இருங்கோவேளின் பெருஞ்சுற்றம் பாழ்பட்டுப் போகவும், சினம் மிகுதலால் சிவந்து விட்ட கண்களால் வெகுண்டு நோக்கினான். - "பல் ஒளியர் பணிபு ஒடுங்கத், தொல்அரு வாளர் தொழில் கேட்ப, வடவர். வாடக், குடவர் கூம்பத், தென்னவன் திறல்கெடச் சீறி, மன்னர், மன்எயில் கதுவும் மகனுடை நோன்தாள்