பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தமிழர் வரலாறு காடுகளை அழித்து, அவற்றை வாழிடங்களாக மாற்றினான் என்ற புலவர் கூற்றிற்குச் சரியான விளக்கமாம் என்பதில் ஐயம் இல்லை. ஆகவே, கரிகாலன் ஆட்சி, தமிழ்நாடு முழுவதிலும், தெலுங்கு நாட்டின் ஒரு பகுதியிலும் பரவியிருந்தது; அவன், மக்களின் விவசாயத் தொழில்களை வளர்த்தான். வாணிகத்திற்கு ஊக்கம் ஊட்டினான். ஆகவே, அவன் நாடு வளம் பெற்றிருந்தது என முடிவு கொள்ளலாம். புதிய தலைநகர் : முதலாவது உரிமை கொண்ட தன் நாடுகளைத் தன்னுடைய கப்பற்படையால், தன் பிடியின் கீழ்க் கொண்டிருக்கலாம். இரண்டாவது, கடல் வாணிகத்திற்கு அங்கிருந்தவாறே ஊக்கம் ஊட்டி, இவ்வகையால், தன் அரசு வருவாயைப் பெருக்கலாம், என்பதற்காகவே தன் தலைநகரை, உறையூரிலிருந்து, பழைய கடற்கரை நகராம் காவிரிப் பூம்பட்டினத்திற்கு மாற்றியதாகத் தெரிகிறது. அந்நகரைச் சூழ, வெற்றித்திருமகள் வாழும் திண்ணிய மதில்களை எழுப்பி, அவற்றிற்குப் பெரிய மரக்கழிகளை இணைத்துப் புவிச்சின்னம் பொறித்துப் பண்ணப்பட்ட வாயிற்கதவுகளை அமைத்தான் என்கிறது பட்டினப்பாலை. "புவிப்பொறிப் போர்க் கதவின் திருத்துஞ்சும் திண் காப்பு" - . . - - 40 - 41. இப்பாட்டு, அந்நகரையும், அதன் புறநகர்ப் பகுதிகளையும் விரிவாக விளக்குகிறது. தமிழகத்துப் பேரூர் ஒன்றின் சமஸ்கிருத இலக்கியங்களில் காணப்படும் விளக்கங்கள் போல் அல்லாமல், மிகைப்படுத்தப்படாத, உள்ளது உள்ளவாறேயான, மிகப்பழைய விளக்கம் இது ஆதலின், அது அப்படியே தருவதற்குத் தகுதி வாய்ந்தது. "அன்று முழுமதி நாள்; செம்பட்டை மயிருடையராகிய பெரிய பரதவர், கருமை நிறம் காட்டிக் குளிர்ந்திருக்கும் பரந்த கடல் மீது மீன்பிடிக்கப் போகவில்லை. அப்பாக்கத்தின் இடையில், மீன்பிடிக்கும் நெடியதுண்டிற்கோல் சார்த்தப்பட்டிருக்கும் தாழ்ந்த கூரைகளைக் கொண்ட குடில்களின் முற்றத்து