பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தமிழர் வரலாறு வீழ்த்தாழைத் தாள் தாழ்ந்த வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர், சினச் சுறவின் கோடுநட்டு - மனைச் சேர்த்திய வல்லணங்கினான், மடல் தாழை மலர் மலைந்தும் பினர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும், புன்தலை இரும்பரதவர் பைந்தழை மாமகளிரொடு பாயிரும், பனிக்கடல் வேட்டம் செல்லாது உணவு மடிந்து உண்டாடியும் - புலருமணல் பூக்கானல் - மாமலை அணிந்த கொண்மூப் போலவும், தாய்முலை தழுவிய குழவி போலவும், தேறுநீர்ப் புணரியோடு யாறுதலை மணக்கும் மணி ஒதத்து ஒலிகூடல் தீது நீங்கக் கடல் ஆடியும், ! மாசு போகப் புனல் படிந்தும், அலவன் ஆட்டியும், உரவுத்திரை உழக்கியும், பாவை சூழ்ந்தும், பல்பொறி மருண்டும், அகலாக் காதலொடு பகல் விளையாடிப், பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும், பொய்யா மரபின் பூம்லி பெருந்துறைத், துணைப்புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து, மட்டு நீக்கி மது மகிழ்ந்து, மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும், நெடுங்கால் மாடத்து ஒள்ளரி நோக்கிக்