பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தமிழர் வரலாறு கூருகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை, ஏழகத்தகரொடு உகளும் முன்றில் குறுந்தொடை, நெடும்படிக்கால், கொடுந்திண்ணைப் பல்தகைப்பின் புழைவாயில் போகுஇடை கழி, மழைதோயும் உயர்மாடத்துக் சேவடிச், செறி குறங்கின், பாசிழைப் பகட்டல்குல், தூசுடைத் துகிர் மேனி, மயில் இயல், மான் நோக்கின் கிளி മുഖ, மென் சாயலோர், வளி நுழையும் வாய் பொருந்தி". - பட்டினப்பாலை : 90 - 151. அத்துறைமுகப் பட்டினத்துப் பெரும் சிறப்புகளாவன கடல்மீது கலங்களில் வந்த, நிமிர்ந்த செலவினை உடைய குதிரைகள் நிலமிசை வண்டிகளில் வந்த கரிய மிளகுப் பொதிகள்; வடநாட்டு மலைகளில் எடுக்கப்பட்ட மாணிக்கமும், சாம்பூநதம் என்னும் பொன்னும் ; மேற்கு மலையில் வளர்ந்த சந்தனமும், அகிலும் ; தென்பாற்கடலில் பிறந்த முத்து, கிழக்குக் கடலில் பிறந்த பவளம் ; கங்கைச் சமவெளியிலிருந்து வந்த பொருள்கள்; காவிரியாற்றுப் பாய்ச்சலால் பெற்ற பல பண்டங்கள், ஈழத்திலிருந்து வந்த உணவுப் பொருட்கள் : க்டாரத்திலிருந்து வந்த கற்பூரம், பன்னீர், குங்குமப்பூ மற்றும் அரிய பெரிய பண்டங்களைக் கொண்டிருப்பதே ஆம் : "நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும்,