பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240. தமிழர் வரலாறு ஆதரவு தரும் பாணி, ஏனைய தமிழரசர்களாலும் விரைவில் பின்பற்றப்பட்டது. சேர அரசர்களில் பல்யானைச்செல் கெழுகுட்டுவன், பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தால் தன்னைப் பாடிய புலவர் பாலைக் கெளதமனாரும், அவர் மனைவியும், யாக முடிவில் நேரே சுவர்க்கம் புகுவதற்காம் யாகத்தைச் செய்யத் துணை புரிந்தான் எனப் பிற்காலக் காதுவழிச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளான். பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசன், பல யாகங் களைச் செய்தான். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வழக்கிற்கு உரிய பொருளாகிப் பண்டு தானம் பெற்றவனின் வழிவந்தவர்க்கே, இம்முறை செப்புச்சாஸனம் தொடர மீண்டும் வழங்கப்பட்ட நிலங்களை இப் பல்யாக சாலை முதுகுடுமி, ஒரு பிராமண வேள்வியாசிரியனுக்குத் தானமாக அளித்தான். கரிகாலனின் வழிவந்த பெருநற்கிள்ளி என்பானொருவன், வேதமுறைகளின்படி முடி குட்டிக் கொண்டதோடு, ராஜகுயம் என்ற யாகத்தைச் செய்து, ராஜகுயம் வேட்ட என்ற சிறப்புத் தொடரைத் தன் பெயரோடு இணைத்துக் கொள்வதும் செய்தான். இவ்வாறு வேத வேள்விகளைச் செய்திருக்கவும், அந்நிகழ்ச்சிக்குப் பிறகு, சோழர் குலம், விரைந்து நிலைகுலைந்து போய்த் தென்னிந்திய வரலாற்றில் சில நூற்றாண்டு காலம் பெரும்பாலும் மறைந்தே போய்விட்டது. - பார்ப்பனத் தமிழ்ப் புலவர்கள் : கரிகாலனின் செயலும் சிந்தனையும், ஆரிய நாகரிகத்திற்கு முழுமையாக அடிமைப்பட்டுப் போனதன் மற்றொரு விளைவு, பல பார்ப்பனத் தமிழ்ப்புலவர்களின் தோற்றமாம். இது, ஆரியக் கருத்துகளுக்கு ஆட்பட்டுவிடாவாறு தமிழ்ப் புலவர்களைத் தடுத்துக் காத்துவந்த அணையை உடைத்து விட்டது. ஆரிய நம்பிக்கைகள், ஆரிய மூட நம்பிக்கைகள், ஆரியப் பழக்க வழக்கங்கள் (சமஸ்கிருதச் சொற்கள்) தமிழர் வாழ்க்கையில் நுழைந்து, தமிழ்ப் பாக்களில், தென்னிந்திய கருத்துகள், நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அடுத்தடுத்துக் கூறப்படவுமாயின. இவற்றை