பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 243 கரிகாலனும் காவிரியும் : இத்தெலுங்குச் செப்பேட்டு ஆவணங்கள், 'கவேரன்மகளின்" (கா-ஏரி எனும் ஆறு) கரை கடந்து ஒடும் வெள்ளப் பெருக்கைத் தடுத்து நிறுத்திய” கரிகாலன் பெருஞ்செயலைக் குறிப்பிடுகின்றன. (IP. India Vol. XI Page: 339). காவிரி ஆற்றுக்குக் கரை கட்டினான் கரிகாலன் எனக் கூறும், முதலாம் ராஜேந்திர சோழ தேவனின் ஆறாம். ஆண்டுத் திருவாலங்காட்டுச் செப்பேட்டுத் தொடர்களில், இத்தொடர்ப் பொருள் விளக்கப்படுகிறது. (S. . . il l Page . 386). காவிரி ஆற்றின் கடைமுகப் பகுதி, பண்டை நாட்களில், புனல் நாடு, அதாவது வெள்ளத்தில் நாடு எனப் பெயர் பெறுமளவு காவிரியாறு நாடு முழுவதையும், ஆண்டு தோறும் தவறாமல், வெள்ளக்காடாக்கி வந்துளது. உயர்ந்த வெள்ளத் தடுப்புக் கரைகளைக் கட்டியதன் மூலம், ஆண்டுதோறும் தவறாமல் நிகழும் இயற்கை விளைவிக்கும் அழிவினின்றும், நாட்டைத் தெளிவுறக் காத்தான். குளம் வெட்டினான், வளம், பெருக்கினான் ("குளம் தொட்டு வளம் பெருக்கி" பட்டினப்பாலை : 284) என்று மட்டுமே கூறும் பட்டினப்பாலையில், கரிகாலனின் இப்பெரும்பணி, சிறப்பிட்டுக் கூறப்படவில்லை. இப்பெரும் பணி, பிற்கால மக்களின் சிந்தனையைக் கவர்ந்த அளவு (உதாரணத்திற்கு : கலிங்கத்துப் பரணி ஆசிரியர் : பாட்டு : 184) அவனுடைய சமகாலப் புலவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை. ஆனால், ஒன்றற்கொன்று தொடர்பிலவாய, தெலுங்கு, தமிழ்ச் சிலா சாஸனங்களின் வரிசைகள் பலவும், இக்காது வழிச் செய்தியைச் சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பதால், காவிரிக்குக் கரை கட்டியது, கரிகாலனின் தொடக்க காலத்திய சிறிய பணியாம் என நாம் நம்பலாம். (பொருநராற்றுப்படையில், துரைத்து ஒலிஎழுப்பிப் பாயும் புனலில், அது, வரைப்பகத்தே பாயும் பகுதியில், மகளிர் நீராடுவர் எனும் பொருள் தருவதான, "நுரைத்தலைக் குரைப்புனல், வரைப்பகம் புகுந்தொறும் புனலாடு மகளிர்" (240 - 241) என்ற தொடர் வருகிறது. கடைசித் தொடருக்கு,