பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் - 247 இரண்டற ஒன்றுபட்டுவிட்ட பல்லவர். இப்பல்லவர்கள், கி. பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து, ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை சிறப்புற்றிருந்தனர். இரண்டாவது காலகட்டம், அதாவது நான்காம் நூற் றாண்டின் இடைக்காலத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையான காலகட்டந்தான், காஞ்சிமீது, பல்லவர்களுக்கு அதிகாரப் பிடிப்பு இல்லாத காலம். அவர்களைக் காஞ்சியிலிருந்து துரத்தியவன், பெரும்பாலும், கரிகாலன் ஆதலும், அவனால், காஞ்சியில் இடமில்லாமல் செய்யப்பட்டு, சோழப் பேரரசனுக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாகத் தெலுங்கு நாட்டில் அரசு கண்டவன், பெரும்பாலும், திரிலோசன பல்லவனாதலும் கூடும். கிழக்குக் கடற்கரைப் பல்லவர்களின் சமஸ்கிருதப் பட்டயங்களில் உள்ள, குடிவழிப் பட்டியலில், திரிலோசனப் பல்லவன் பெயர் இடம் பெறவில்லை. ஆனால், கோவாக் கதம்பர்களும் ஹேமாவதி நொளம்பர்களும், திரிலோசனக் கதம்பனையும், திரிலோசன நொளம்பனையும், முறையே, தங்கள் அரச இனங்களைத் தோற்றுவித்த குல முதல்வர்களாக உரிமை G)&maior, TG&icirpanrff. (Ep. India XI Page : 340 X Page : 58) கடப்பா மாவட்டத்தில், இடம் பெற்றுள்ள, இப்போது, "பெத்தமுடியம்' என வழங்கும் திரிலோசனபுரம் என்ற நகரைத் திரிலோசன பல்லவன் நிறுவினான். திரிலோசன பல்லவன், புராணத் தொடர்பான கற்பனை மனிதன் அல்லன்; தெலுங்கு நாட்டின் சில பகுதிகளை ஆண்ட உண்மையான அரசனே என்பதை உறுதி செய்ய மேலும் பல உண்மை நிகழ்ச்சிகளும் உள. தெலுங்குச் சோழர் கல்வெட்டொன்று, (1907 ஆம் ஆண்டு 580 ஆம் எண்) முக்கண்டிகாடுவெட்டி என்பான், அதாவது திரிலோசன பல்லவன், "வெருகண்டுர்" என்ற சிற்றுாரை, 52 பிராமணர்களுக்கு வழங்கியதைக் குறிப்பிடுகிறது. இந்த அரசன், ரீபர்வதத்திற்குக் கிழக்கில் 70 அக்ராகரங்களை நிறுவுவதும் செய்தான் (Madras Epc. Report 1908. P. 82, 83). -