பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத்தில்... வடஇந்தியத் தொடர்பு 19 அயுதாயுவின் சம காலத்தவன். அய்த்ரேயா மற்றும் பிற பிராமணாக்கள், மகாபாரதக் காலத்து வேதவியாசர், சமிதாக்களைத் தொகுத்ததன் மூலம், வேத மந்திரங்களுக்கு "முடிவுகட்டிவிட்ட காலத்திற்குச் சிறிது பிற்பட்ட காலத்தில் இயற்றப்பட்டனவாம். ஆக, பீமா, அய்த்ரேய பிராமனாக் களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தவன்; அவனுக்குப் பத்துத் தலைமுறைகளுக்கு முன்னரே, விந்தியம் கடக்கப்பட்டு, விதர்ப்ப நாடு தோற்றுவிக்கப்பட்டுவிட்டது, ஜயா மகன் என்ற யாதவ குல இளவரசன் ஒருவன், அவனுடைய நாடுகடத்தப்பட்டு, நாகர்களும், பிற தஸ்யூக்களும் குடிவாழும், நர்மதாவின் மலைகள்செறிந்த, மேட்டுப் பகுதியில், தன் எதிர்கால வாழ்வைத் தெற்கு நோக்கித் தேடலாயினன்; அவன், அங்குக் கொள்ளையடித்து உண்ணும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். அவன், அல்லது அவள் மகன், விதர்ப்பா என்பவன், தெற்கு நோக்கிச் சென்று, தபதி ஆற்றங்கரையில், தனக்கென ஒரு நாட்டைத் தோற்றுவித்துக் கொண்டான். அந்நாடும் அதன் தலைநகரும் அவன் பெயரால் விதர்ப்பம் என அழைக்கப்பட்டது. அவனுக்குப்பிறகு பலஆண்டு கழித்தே, பீமரதன் ஆட்சி மேற்கொண்டான். விந்தியப் பகுதியில், பண்டைக் காலத்தில் விதர்ப்பம் மட்டுமல்லாமல், வேறுபல ஆரிய நாடுகளும் நிறுவப் பட்டிருந்தன. விதர்ப்பம், அல்லாமல், தக்கண கோசலம், சேதி, தளவாரணம், நிடதம் ஆகியவைகள், விந்திய மலையடிவாரத்தில், வேதகாலத்து இடைப்பகுதியில் இருந்த ஆரியக் குடியிருப்புகளாம். சேதி நாட்டு ராஜா, கசு என்பான் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளான் சேதி, தளபாரணம், விதர்ப்பம், தெற்குக் கோசலம் மற்றும் பல நாட்டு அரசர்களைப் பற்றிய சுவையான விளக்கங்கள், மகாபாரத நளோபாக்கியானத்தில் கூறப்பட்டுள்ளன. புராணங்களில் சைதைய நாட்டு அரசர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். முட்கல நாட்டு அரசன் மனைவி, இந்திரசேனை என்பாள், தன் கணவன், தஸ்யூக்களோடு நடத்திய போரில், அவன் தேரை ஓட்டினாள், அவள், தேரோட்டுவதில் புகழ் பெற்ற