பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் - 251 போரிடும் அரசர் எவரும் இலராகவே, போர் ஆர்வம் மிக்க திருமாவளவன், வாள், குடை, மயிர்நீக்காத் தோல் போர்த்த முரசுகளோடு நல்ல நாளில், தலைநகரின் நீங்கி, வடதிசைக் கண், எதிர்க்க வல்ல பகைவரைப் பெறலாம் என்ற வேட்கையால், வடநாடு நோக்கிச் சென்ற போது, இமையவர் இருக்கும் இமயப் பெருமலை, அவன் ஆசை அழியுமாறு இடை நின்று தடுத்து, அவன் ஊக்கத்தை உருக்குலைத்து விடவே, அம்மலை மீது சினம் கொண்டு அதன் பிடரியில், தன் புலிச் சின்னத்தைப் பொறித்துவிட்டு, எண்ணிச்சென்றது ஈடேட்றாதாக, மனம் சலித்து மீள்பவனுக்குக், கடல் அரண்கொண்ட வச்சிர நாட்டு அரசன் திறையாகக் கொடுத்த முத்துப் பந்தர். வாட்போர் வல்ல மகதத்து மன்னன், போரில் தோற்றுக் கொடுத்த பட்டி மண்டபம், அவந்தி வேந்தன், உவந்து அளித்த தொழில் நலம்மிக்க வாயில் தோரணம், என்ற பொன்னும், மணியும் கொண்டு தொழில் வல்ல கம்மியனால் பண்ணப்படாத, இவர்களின் குல முன்னோர், தனக்கு இடர் வந்துற்றபோது, ஒரொரு கால் செய்த உதவிகளுக்குக் கைம்மாறாக, மயனால் செய்து கொடுக்கப் பட்ட இம்முன்றையும் வைத்து, உயர்ந்தோர் ஒன்று கூடிவந்து ஏத்தும் மண்டபம்". - "இருநில மருங்கில் பொருநரைப் பொறா அச் செருவெங் காதலின் திருமா வளவன், வாளும், குடையும் மயிர்க்கண் முரசும், நாளொடு பெயர்ந்து, "நண்ணார்ப் பெறுக, இம் மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்", என்ப புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள், ! அசைவில் ஊக்கத்து நசை பிறக்கு ஒழியப், பகைவிலக் கியது.இப் பயங்கெழு மலை என, இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஏற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு, மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் 17